திங்கள், 28 பிப்ரவரி, 2022

அன்று குலக்கல்வியை எதிர்த்தோம், இன்று நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறேன்!" முதல்வர் ஸ்டாலின் அதிரடி

  Vigneshkumar   -  Oneindia Tamil  :  சென்னை: "உங்களில் ஒருவன்" புத்தகம் வெளியிட்ட விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அன்று குலக்கல்வியை எதிர்த்து போராடினேன் என்றும் இன்று தேர்வை எதிர்த்துப் போராடுகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 முதல்வர் ஸ்டாலின் தனது பிறப்பு, அரசியல் பயணம், திருமணம், மிசா கைது வரை வாழ்க்கை குறிப்புகளை "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் சுயசரியைதாக எழுதியுள்ளார்.
முதல்வர்  மு.க ஸ்டாலின் எழுதியுள்ள இந்த புத்தகத்தை வெளியிடும் விழாவில் ராகுல் காந்தி, பிரனாய் விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


உங்களில் ஒருவன் இந்த நிகழ்ச்சியில், இறுதியாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நான் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன்.
எத்தனை உயர்வான இடத்தில் உட்கார வைத்தாலும் உங்களில் ஒருவன் நான். திமுகவில் இணைந்த காலம் முதல் இப்போது வரை உங்களில் ஒருவனாகத்தான் செயல்படுகிறேன்.
 முதல்வரான நிலையிலும் உங்களில் ஒருவனாகவே செயல்படுவேன். பதவி என்பதைப் பொறுப்பு என மாற்றியவர் கலைஞர் . அது எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது.

நான் அரசியல் பயிராகத்தான் வளர்ந்தேன் என்பதை இப்புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அரசியல் என்பது என் ரத்தத்தில், சிந்தனையில், செயலில் கலந்தது. மிகச் சிறிய வயதிலேயே அரசியல்தான் எதிர்காலம் என்பதைத் தீர்மானித்தேன். சென்னை மேயராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது செய்தியாளர் ஒருவர், நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் என்ன ஆகி இருப்பீர்கள் எனக் கேட்டார். அதற்கு நான் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். கண்டிப்பாக நான் அரசியலுக்குத் தான் வந்திருப்பேன் என்று.

நான் எனது இலக்கை அடைவதற்குச் சாகசம் செய்யவில்லை. இயல்பாகலே இருந்தேன். பிறக்கும் போதே ஒரு தலைவரின் மகனான பிறந்தது என் பக்குவத்துக்குக் காரணமாக இருக்கலாம். சாதாரண ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நடக்காதவை நிகழ்ந்திருக்கின்றன. 5 மாத கைக்குழந்தையாகத் திருச்சி சிறையில் என் தந்தையிடம் காண்பித்திருக்கிறார்கள்.

என் 12 வயதில் தேச பாதுகாப்பு சட்டத்தில் கலைஞர்  முரசொலி மாறன் கைது செய்யப்பட்டனர். நான் கல்லூரி படிப்பு காலத்தில் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டேன்.

 அத்தனை திருப்பங்களையும் 23 வயதுக்குள் பார்த்தவன் நான். சென்னை கோபாலபுரம் வீடு ராஜசபை. அது எங்களது உயிர் சபை. அது தான் என்னை உருவாக்கியது. அண்ணா, கருணாநிதி அமர்ந்த நாற்காலியில் அமருவேன் என நினைத்ததே இல்லை. நான் பிறந்த போது குலக்கல்வி எதிராகப் போராடினார்கள். இன்று நீட் தேர்வுக்கு எதிராகப் போராடுகிறோம். மாணவராக இருந்த போது நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடருகிறது. மாநில சுயாட்சிக்கான முழக்கம் அன்று முதல் இன்று வரை தொடருகிறது

திராவிட  மாடல் அல்லது திராவிடவியல் ஆட்சிமுறை என்பதுதான் எங்களது கோட்பாடு. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியல் கோட்பாடு. இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்; அனைத்து தேசிய இனங்களுக்குச் சம உரிமை என்பது திராவிடவியல் கோட்பாடு. கூட்டாட்சி தத்துவத்தை சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்
 தமிழகத்தை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது என்று ராகுல் காந்தி சொன்ன வரிகள் இன்னும் ஒலித்து கொண்டிருக்கிறது.
திராவிடவியல் கோட்பாட்டை ராகுல் காந்தி முழுமையாக உள்வாங்கி இருக்கிறார். கூட்டாட்சி தத்துவம் குறித்து அதிகம் பேசுகிற ராகுலுக்கு தமிழகத்தின் நன்றி. மாநில சுயாட்சி மாநில சுயாட்சி மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இந்தியாவின் முழக்கம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும். 1975- ஆக. 20-ல் எங்கள் திருமணம் அகில இந்தியத் திருவிழா போல் நடந்தது. மதவாத சக்திகளை வீழ்த்த ஒன்றுபடுவோம்- அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாப்போம்" என்றார்


கருத்துகள் இல்லை: