மாலைமலர் : ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் என்று தெரிவித்தார்.
27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்
நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள்.
அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக உக்ரைனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக