வெள்ளி, 29 அக்டோபர், 2021

Face book - Meta பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்

தினத்தந்தி : வாஷிங்டன்,  சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.

‘சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அது அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் .
எதிர்கால இணையதளம் மெய்நிகர் உலகமாக மாறும் என்பதால், இந்த பெயரை தேர்ந்தெடுத்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளின் பெயர் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் மிரர் : சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின.

இதனால் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாடு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்தார்.
சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம். கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை: