வியாழன், 28 அக்டோபர், 2021

தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் நலன் ஆலோசனை குழுவில் கலாநிதி ஆற்காடு வீராசாமி எம்பி நியமனம்

Live Chennai: Lok Sabha 2019: Chennai (North) Kalanidhi Veeraswamy (DMK) ,  Chennai (North) constituency 2019, Chennai (North) parliamentary  constituency, Chennai (North) candidate Kalanidhi Veeraswamy (DMK),  Kalanidhi Veeraswamy (DMK) Chennai (North ...

  Arsath Kan - e Oneindia Tamil News சென்னை: இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் கனிமொழி எம்.பி.க்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆற்காடு வீராசாமியின் மகனை நியமித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதோடு இந்த நியமனம் அதிருப்தியையும் அளித்துள்ளது.
இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின், வழக்கறிஞர் மனு, உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஈழத்தமிழர்கள் மீது அதீத அக்கறையும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமும் காட்டிவரக் கூடிய கனிமொழி எம்.பி.க்கு இந்த குழுவில் இடம் தராதது அவரது ஆதரவாளர்கள் வட்டத்தில்  ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

அண்மையில் கூட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று தனது சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். இலங்கை அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததால் பொதுவாக அரசியல்வாதிகள் அகதிகள் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டனர்.
ஆனால் வாக்கு அரசியலைக் கடந்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதரவாக நின்று உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதில் கனிமொழி உறுதியாக இருப்பவர்.

இதனால் தமிழக அரசின் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் எப்படியும் கனிமொழி முக்கிய பங்கு வகிப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், கனிமொழி இடத்தை கலாநிதி வீராசாமி பிடித்திருக்கிறார்.
இலங்கை அகதிகள் முகாமின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஆகியோரை தவிர்த்து இலங்கை அகதிகள் முகாம் வாழ் பிரதிநிதி ஒருவர் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் நலன் காக்க ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டது திரும்பிப்பார்க்கத் தக்கது.

கருத்துகள் இல்லை: