ஞாயிறு, 16 மே, 2021

கம்யூனிஸ்ட் கட்சியில் வேறு நபர்களே இல்லையா? .. கட்சியை காலியாக்கும் பதவி மோகம்

May be an image of 1 person and text that says 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ஏடான ஜன சக்தியின் வார இதழ் ஆசிரியர் பொறுப்பை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே சுப்பராயன் M.P அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார் அவருக்கு திருப்பூர் கட்டாங்காடு கிளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹனசக்கி'

Silambu Rajendran :  பதவி எனும் மோகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர், ஏஐடியூசி மாநில தலைவர், ஜனசக்தி ஆசிரியர், பாராளுமன்ற உறுப்பினர் அப்புறம் வேற பொறுப்பு இருந்தால் அதையும் சேர்த்தே கொடுங்கள் ஏன் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் வேறு நபர்களே இல்லை..
கட்சியின் தேய்மானம் என்பது இதிலிருந்தே தொடங்குகிறது
கட்சியின் பொறுப்புகளை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே காலங்காலமாக கைப்பற்றி வைத்து கொள்வதும் ஒரே நபர் பல பொறுப்புகளை வகிப்பது
என்பதும் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்தும் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாகவும் கொள்கை மற்றும் கட்சி வளர்ச்சியை விட பதவி சுகமே முக்கியமானது என்பதை காட்டுவதாகவும், பொதுக்குழு நிர்வாக குழுவில் தனக்கான ஆதரவு கரம் அதிகமாக இருப்பதற்காக தனக்கு வேண்டியவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதும் தெளிவாக தெரிகிறது....
எனக்கு தெரிந்து மாநில செயலாளர்கள் தான் ஜனசக்தி ஆசிரியர் ஆசிரியராக இருந்துள்ளனர்... ஆனால் இப்போது எல்லாம் மாறுகிறது...

 இதன் அர்த்தம் மாநில செயலாளரை விட மாநில துணைச் செயலர் ஆதிக்கம் கட்சியையும் கட்சியின் மற்ற அமைப்புகளையும் கட்டுப்படுத்துவதாகவும் தெரிகிறது..


இனி வரும் காலங்களில் நிரந்தர மாநில செயலாளராக தோழர் சுப்புராயனே தேர்ந்தெடுக்கப்படலாம் யாருக்கு தெரியும் எதுவும் நடக்கலாம்...
தனது தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் தோழர் ரவி அவர்களை வெற்றி பெற வைக்கவே முடியாத இவர் நாளை ஏஐடியூசி, ஜனசக்தி, கட்சி, என அனைத்தையும் வளர்ச்சி எனும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார் என நம்புவோமாக..
கட்சி செல்வாக்குள்ள 6 தொகுதிகளை பெற்று வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது ஏன் என பரிசீலனை செய்ததாக தெரியவில்லை இருக்கிற பொறுப்புகளை எத்தனை யாருக்கு என பிரித்து கொள்வதில் தான் மும்முரமாக இருக்கின்றனர்...
மீதம் இருக்கிற விவசாய சங்க மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர், இளைஞர் மன்ற மாநில செயலாளர் பொறுப்புகளையும் இவரிடமே கொடுத்திவிட்டால் பத்து கை உள்ள காளி தேவி போல் ஒற்றை ஆளாய் செயல்படுவார்....
என்ன அவரை போல நபர்கள் தான் கட்சியாய் இருப்பார்கள்...
கம்யூனிஸ்ட்கள் எல்லாம் கட்சிக்கு வெளியே இருப்பார்கள்...

கருத்துகள் இல்லை: