திங்கள், 17 மே, 2021

சிறுத்தைகளும் வன்னிய இளைஞர்களும் அரங்கேற்றிய நாடகம் .. விழுப்புரத்தில் நடந்தது ஜாதி மோதல் அல்ல!

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

 LR Jagadheesan  :    இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது.
“வன்னியர் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?
அந்த சமயத்தில் உண்மையிலே என்னதான் நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள வன்னியர் தரப்பில் விசாரித்தோம்.
“இதுவரை எங்கள் ஊரில் சாதி மோதல் நடந்தது இல்லை. இரு தரப்பினரும் மாமா மச்சான், அண்ணன் தம்பிகளாகத்தான் பேசுவோம் பழகியிருக்கிறோம். வெளியூருக்குச் செல்ல அல்லது நகரபகுதிக்கு செல்ல பஸ் ஏறுவதற்கு மனக்குப்பம் நடந்து செல்வோம். அப்போது எங்களைப் பார்த்தால் பைக்கில் ஏற்றிக்கொண்டு போவார்கள். பேருந்து நிறுத்ததிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். டீ வாங்கி கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம்தான் நல்லது கெட்டதுக்குக் கடன் வாங்குவோம். எங்கள் பெண்களோடு சிலர் இங்கே வந்து குடியிருக்கிறார்கள், குடும்பத்தையும் குடும்பத்தையும் நல்லவிதமாக பார்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அமைதியான ஊரை அசிங்கப்படுத்தி சாதி மோதலை உருவாகிவிட்டார்கள் சில விஷமிகள்.

இருதரப்பினரும் சமாதானம் பேச ஆலமரத்தடியில் கூடினோம். அதில் சில விஷமிகள் மூன்று வயதான ஆட்களை செட்பண்ணி, அவர்களாகவே வந்து திடீரென்று காலில் விழ வைத்தார்கள். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த காட்சிகளை அவர்களே வீடியோ எடுத்து பிரச்சனையை செய்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே இரு தரப்பு இளைஞர்களும் அடித்துக்கொண்டார்கள்.
எங்கள் தரப்பிலும் சாதி வெறிபிடித்தவர்கள் சிலர் இருப்பதுபோன்று, அவர்கள் தரப்பிலும் சிலர் சாதி வெறிபிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்தால் காவல் துறைக்கு புண்ணியமாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.
பட்டியல் இன தரப்பில் என்ன சொல்கிறார்கள்?
இந்த சம்பவம் குறித்து பட்டியல் இனத்தவர் தரப்பில் விசாரித்தபோது, ”எங்கள் ஊரை பொறுத்தவரை இரு தரப்பினரும் சாதி மதம் பார்க்காமல் ஒற்றுமையாகத்தான் இருப்போம். அவர்களைவிட எங்கள் ஆளுங்கதான் வசதியாக இருக்கிறவர்கள். அனைவரும் பாசமாகத்தான் பழகுவோம் நம்பிக்கையாகக் கொடுக்கல் வாங்கலும் இருக்கும். அந்தத் தரப்பில் வன்னியர் இளம் சிங்கங்கள் என்றும், இந்த தரப்பில் சிறுத்தைகள் என்றும் சில விஷமிகள் தனிப்பட்ட விரோதமும், தனிப்பட்ட கௌரவப் பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு மோதலை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்டது என்னமோ அப்பாவிகள்தான்” என்றனர்.”

 minnambalam :  விழுப்புரம் மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவால் இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்துகொள்ள ஒரு சமூகத்தினர் காலில் மற்றொரு சமூகத்தினர் விழுந்து மன்னிப்பு கேட்கும் வீடியோவும், செய்திகளும் கொரோனா வைரஸ் தொற்றைப் போல் பரவி வருகிறது.

ஒட்டனேந்தல் கிராமம் எப்படிப்பட்டது?

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பெரியசெவலை அருகில் மனக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஒட்டனேந்தல் என்ற கிராமம். அந்த கிராமத்தில் வன்னியர், நாயுடு, பட்டியல் இனத்தவர் ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். வன்னியர்கள் பகுதிகளைவிட பட்டியல் இனத்தவர் பகுதி வசதி வாய்ப்பாகவும் மாடி வீடுகளாகவும் காட்சியளிக்கிறது. அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது.

சாதிக்கொரு கோயில்

சித்திரை மாதம் என்றால் வழக்கமாக ஊரில் உள்ள அம்மனை வழிபட்டு கூழ் மற்றும் கஞ்சி ஊற்றுவார்கள், (அனைத்து மக்களும் தயாரித்து வரும் உணவுகளை ஒன்று சேர்த்துக் கலந்து அனைவருக்கும் கொடுப்பார்கள்) ஒட்டனேந்தல் கிராமத்தில் வன்னியர் சாதியினர் பகுதியில் ஒரு மாரியம்மன் கோயிலும், பட்டியல் இனத்தவர் பகுதியில் ஒரு மாரியம்மன் கோயிலும் உள்ளது.

திருவிழா என்றால் முதலில் வன்னியர் கோயிலில் திருவிழா செய்தபிறகுதான் பட்டியல் சாதியினர் கோயிலில் திருவிழா செய்யவேண்டும் என்பது காலம்காலமாக பழக்கமாக வைத்துள்ளனர். அதே பகுதியில் சின்ன மயிலம் என்ற முருகன் கோயில் உள்ளது. அந்த கோயில் திருவிழாவுக்கு இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்துதான் ஒற்றுமையாக மிகச் சிறப்பாகத் திருவிழா கொண்டாடுவார்கள்.

ஊரடங்கால் விளைந்த யோசனை

பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் பலர் பெங்களூர், டெல்லி, சென்னை போன்ற வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்தவர்கள், தொற்று பரவல் காரணத்தால் ஊரடங்கு போடப்பட்டதால்.... வேலை இல்லாமல் சொந்த ஊரான ஒட்டனேந்தலுக்கு திரும்பினார்கள்.

இந்நிலையில், பெங்களூரிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர், ஊர் மக்களை ஒன்றுக்கூட்டி மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றி ஆடலும் பாடலும் நடத்தலாம் என்று திட்டமிட்டனர். அதன்படி, மே 12ஆம் தேதி,(புதன் கிழமை) திருவிழா நடத்தி ஆடலும் பாடலும் நிகழ்ச்சியும் நடத்தினார்கள்.

இதுகுறித்து ரகசியமாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விழாவை நிறுத்திவிட்டு மைக் செட்டுகளை பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்கள்.

மறுநாள் (மே 13) வழக்கறிஞர்களுடன் சென்ற இளைஞர்கள், செய்த தவறை ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்துவிட்டு மைக் செட்டுகளை பெற்றுவந்தார்கள். அதில் சில இளைஞர்கள் வன்னியர் தரப்பு இளைஞர்களிடம் சென்று சண்டைபோட்டுள்ளார்கள். ’நீங்கள்தான் போலீசிடம் தகவல் சொல்லி பிரச்சனைப் பண்ணிட்டீங்க. இதனால் எங்களுக்கு 2 லட்சம் வீணாகிவிட்டது’ என்று கூறி சண்டையிட்டுள்ளனர்.

சமாதானம் இடம் சண்டையானது எப்படி?

இதையடுத்து, இருதரப்பினரும் சமாதானம் பேசுவதற்கு மே 14ஆம் தேதி பொது இடமான ஏரிக்கரையில் உள்ள மரத்தடியில் கூடினார்கள். அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த சந்தானம்(72), திருமால்(70), ஆறுமுகம்(65) ஆகிய மூவரும் சேர்ந்து 100 ரூபாய் பணத்தை வைத்து காலில் விழும் காட்சிதான் தற்போது பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ரோஸ் நிறம் சட்டை கட்டம்போட்ட கைலி அணிந்திருந்த திருவேங்கடம் என்பவர் மூன்று பெரியவர்களையும் காலில் விழச்சொல்கிறார். அவர்களும் திடீரென்று காலில் விழுகிறார்கள். ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை, யார் உங்களைக் காலில் விழச்சொன்னது?’ என சிலர் கூறுவதையும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.

வன்னியர் தரப்பினர் என்ன சொல்கிறார்கள்?

அந்த சமயத்தில் உண்மையிலே என்னதான் நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ள வன்னியர் தரப்பில் விசாரித்தோம்.

“இதுவரை எங்கள் ஊரில் சாதி மோதல் நடந்தது இல்லை. இரு தரப்பினரும் மாமா மச்சான், அண்ணன் தம்பிகளாகத்தான் பேசுவோம் பழகியிருக்கிறோம். வெளியூருக்குச் செல்ல அல்லது நகரபகுதிக்கு செல்ல பஸ் ஏறுவதற்கு மனக்குப்பம் நடந்து செல்வோம். அப்போது எங்களைப் பார்த்தால் பைக்கில் ஏற்றிக்கொண்டு போவார்கள். பேருந்து நிறுத்ததிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். டீ வாங்கி கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களிடம்தான் நல்லது கெட்டதுக்குக் கடன் வாங்குவோம். எங்கள் பெண்களோடு சிலர் இங்கே வந்து குடியிருக்கிறார்கள், குடும்பத்தையும் குடும்பத்தையும் நல்லவிதமாக பார்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட அமைதியான ஊரை அசிங்கப்படுத்தி சாதி மோதலை உருவாகிவிட்டார்கள் சில விஷமிகள்.

இருதரப்பினரும் சமாதானம் பேச ஆலமரத்தடியில் கூடினோம். அதில் சில விஷமிகள் மூன்று வயதான ஆட்களை செட்பண்ணி, அவர்களாகவே வந்து திடீரென்று காலில் விழ வைத்தார்கள். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த காட்சிகளை அவர்களே வீடியோ எடுத்து பிரச்சனையை செய்துவிட்டார்கள். அந்த இடத்திலேயே இரு தரப்பு இளைஞர்களும் அடித்துக்கொண்டார்கள்.

எங்கள் தரப்பிலும் சாதி வெறிபிடித்தவர்கள் சிலர் இருப்பதுபோன்று, அவர்கள் தரப்பிலும் சிலர் சாதி வெறிபிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்தால் காவல் துறைக்கு புண்ணியமாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

பட்டியல் இன தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

இந்த சம்பவம் குறித்து பட்டியல் இனத்தவர் தரப்பில் விசாரித்தபோது, ”எங்கள் ஊரை பொறுத்தவரை இரு தரப்பினரும் சாதி மதம் பார்க்காமல் ஒற்றுமையாகத்தான் இருப்போம். அவர்களைவிட எங்கள் ஆளுங்கதான் வசதியாக இருக்கிறவர்கள். அனைவரும் பாசமாகத்தான் பழகுவோம் நம்பிக்கையாகக் கொடுக்கல் வாங்கலும் இருக்கும். அந்தத் தரப்பில் வன்னியர் இளம் சிங்கங்கள் என்றும், இந்த தரப்பில் சிறுத்தைகள் என்றும் சில விஷமிகள் தனிப்பட்ட விரோதமும், தனிப்பட்ட கௌரவப் பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு மோதலை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் பாதிக்கப்பட்டது என்னமோ அப்பாவிகள்தான்” என்றனர்.

அமைதியைக் கெடுக்கும் சாதிச் சங்கங்கள்

அமைதியான ஊர்களிலும் சாதி சங்கம் உருவெடுத்து, அது வெறியாக மாறி மக்கள் அமைதியைச் சீர் குலைப்பதாகச் சொல்கிறார்கள் ஒட்டனேந்தல் சுற்றியிருக்கும் கிராமத்து மக்கள்.

இது ஒரு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நாடக ஷுட்டிங், இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் இரு சமூகத் தலைவர்களும் ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். சாதி மோதலை உருவாக்கும் சில விஷமிகளை கண்டுபிடித்து கட்டுப்படுத்தினாலே எதிர்காலத்தில் இரு சமூகமும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர் அவ்வட்டார கிராமத்து மக்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக, வெங்கடேசன் மகன் முருகன், பாண்டுரங்கன் மகன் லோகநாதன், ராமசாமி மகன் குமரன், ஆதிகேசவன் உள்ளிட்ட 54 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீஸார்.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை: