வியாழன், 20 மே, 2021

கேரளா அமைச்சரவை திமுக பாணியில் "மனசாட்சியை முன்னிறுத்தி" பதவி ஏற்பு!

 Shyamsundar -  tamil.oneindia.com : திருவனந்தபுரம்: கேரளா முதல்வராக பினராயி விஜயன் இன்று 2-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியாது என்பதை உடைத்து, எல்டிஎப் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலைகேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார்.
அவருடன் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். அமைச்சர்கள் அமைச்சர்கள் முதல்வரை தொடர்ந்து அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். 12 அமைச்சர்கள் இதில் சிபிஎம் கட்சியில் இருந்து பதவி ஏற்றனர். சிபிஐ கட்சியில் இருந்து 4 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

யார் எல்லாம் இது போக கேரளா காங்கிரஸ் (மணி), ஜனதா தளம் (மதசார்பற்ற), தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒரு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். உளமாற உறுதி ஏற்பதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் உட்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். மனசாட்சி படி பதவி ஏற்றப்பதாக கூறி இவர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

கடவுள் பெயர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் கடவுளின் பெயரால் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் யாரும் கடவுளின் பெயரால் பதவி ஏறக்கவில்லை. எல்லோரும் உளமாற உறுதி ஏற்பதாக கூறி பதவி ஏற்றனர். மக்களிடையே இது பெரிய அளவில் கவனம் ஈர்த்த நிலையிலும்
கேரளாவிலும் இடைசாரி எம்எல்ஏக்கள் இதேபோல் பதவி ஏற்றனர்.

லிஸ்ட் : பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார், மற்றும் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: