ஞாயிறு, 16 மே, 2021

ஜூனியர் விகடனின் புலி புராண வரலாறு

ஜூனியர் விகடன் செய்தியாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் கைது : நாடு  கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டம்! கைதுக்கு காரணம் ...

ஜூனியர் விகடனுக்கு ஒரு இரத்த  கறை படிந்த வரலாறு உண்டு .
ஈழ போராட்டம் ஆரம்பித்த உடனே உலகம் முழுதும் ஈழத்தமிழர் பரவினர். இன்றைய தொடர்பு சாதனங்கள் எதுவும் அன்றிருக்கவில்லை.
ஈழத்தமிழர்களிடையே ஈழத்து செய்திகளை கலர் படங்களோடு தங்களது கவர்சிகரமான கற்பனைகளோடு பரப்பியதில் ஜூனியர் விகடனுக்கு பெருத்த வருமானம் . அதுவும் டாலர்களில் பவுண்களில் பிராங்குகளில் டினார்களில் எல்லாம் கொட்ட ஆரம்பித்தது.
விகடன் குழுமம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியதன் மர்மம் இதுதான்.
புலிகள் டெலோ ஈபிஆர் எல் எப் போன்ற சகோதர இயக்கங்கள் மீது கொலைவெறி தொடங்கியதும் . உலக தமிழர்கள் மத்தியில் ஈழப்போராட்டம் மீது ஒரு சலிப்பு வெறுப்பு விரக்தி எல்லாம் ஏறபட்டது.
இதன் காரணமாக ஜூனியர் விகடனின் வெளிநாட்டு விற்பனை அடியோடு சாய்ந்தது.
புலிகளுக்கு இந்த் சகோதர படுகொலையால் ஏற்பட்ட பின்னடைவை விட ஜூனியர் விகடனுக்கு வெளிநாட்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவு பாரதூரமானதாக ஜூனியர் விகடன் கருதியது .
இதில் இருந்து மீண்டும் புலிகளின் கலர் படங்களையும் கவர்ச்சிகரமான செய்திகளையும் விற்க வேண்டிய தேவை புலிகளை விட ஜூனியர் விகடனுக்கு ஏற்பட்டது.


யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பச்சை துரோகத்தை ஜூனியர்  விகடன் செய்தது
நடு நிலையோடு சகல இயக்கங்களின் தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டிய ஜூ.வி பிரபாகரனை ( தமிழ்நாட்டில் எம்ஜியாரின் போஷிப்பில் இருந்தார் அவர்) பேட்டி கண்டு மிகபெரிய கட்டுரையை வெளியிட்டது .. அதுவம் மிகவும் கவர்சிகரமான கலர்  படங்களுடன் .
ஒரு சகோதர படுகொலையை அழகு படுத்தி Glorify காட்சிக்கு வைத்தது.
அன்றில் இருந்து புலம் பெயர் தமிழர்களின் புலி தாகத்திற்கு சாராயம் ஊற்றியது இந்த ஜூனியர் விகடன்தான்    .
அவர்களுக்கு நாட்டின் உண்மை நிலை தெரியாமல் காலமெல்லாம் தவறாகவே சிந்தித்தமைக்கு ஜூவியும் ஒரு பெரிய காரணம். கலைஞர் / திமுக மீதான் ஈழ தமழர்களின் ஒவ்வாமையை கட்டி எழுப்பியதும் ஜூனியர் விகடன்தான் .
மீள் பதிவு 1Aug 2019

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

என்ன செய்வது . இப்படி எழுதியாவது உங்கள் அரிப்புக்களை தீர்க்கவேண்டியதுதான்.மக்கள் எப்போதும் அவர்களின் பக்கம் தான்.
வ்