புதன், 19 மே, 2021

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி- திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
maalaimalar : ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என்றும், ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பூரில் நாளை தொடங்கி வைக்க உள்ளார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்படுகிறது. 

ரெம்டெசிவிர் மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

இதேபோல் பெருந்தொற்று காலத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசே ரெம்டெசிவிர் மருந்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி பதிவு செய்திருந்த 343 தனியார் மருத்துவமனைகளில் முதல் கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 மருந்துக் குப்பிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை: