தினகரன் :
ஸ்ரீநகர் : சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில்
காஷ்மீரில் 3 முன்னாள்
முதலமைச்சர்களுக்கு ஏன் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 3 முன்னாள் முதலமைச்சர்களின் சுதந்திரம் ஏன் பறிக்கப்பட்டு இருக்கிறது என்று வினவியுள்ளார். 2 முன்னாள் முதலமைச்சர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மற்றொருவரை ஏன் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதோடு பிரிவினைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிராக போராடிய அரசியல் தலைவர்கள் ஏன் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் சிதம்பரத்தின் கேள்வியாகும். நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த உமர் அப்துல்லா, மெகபூபா முஃதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை மேற்கொள் காட்டி முன்னாள் முதலமைச்சர்களுக்கு சுதந்திரம் இல்லையா என ப. சிதம்பரம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக