வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஓலைச்சுவடி திருமண அழைப்பிதழ்! இலை,தழை,காய்கறி,பழங்கள் கொண்ட அலங்காரங்கள்!


சாவித்திரி கண்ணன் : எத்தனையெத்தனை புதுமைகள்!; ஓலைச்சுவடி திருமண அழைப்பிதழ்! இயற்கையான இலை,தழை, காய்கறி,பழங்கள் கொண்ட அலங்காரங்கள்!
எல்லா நிலைகளிலும் பிளாஷ்டிக் தவிர்த்த அணுகுமுறைகள்!> காதை பிளக்காத மங்கள இசை கச்சேரி!
உணவில் 40% பாரம்பரிய உணவு வகைகள்!
திருமண முறைகளை விளக்கும் புத்தக வெளியீடு!
இப்படியாக ஒரு திருமணத்தை நமது பாரம்பரிய மீட்டுருவாக்கமாக நடத்தி காண்பித்துவிட்டனர். நண்பர் மகேஷும், நமது நண்பர் குழாமும்!
செல்வத்தின் சிறப்பு என்பது செருக்கொழித்து நிற்றலே!
அந்த வகையில் அழைத்த அனைத்து விருந்தினர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாசலில் நின்று அழைத்த கனிவும்,பணிவும் சிறப்பான ஒன்று!
பல்லாண்டு நட்பு! பல்லாண்டு இடைவெளி! – எனினும் எந்த விரிசலும் இல்லை!

இடைவெளிகள் இமைப் பொழுதில் மறைந்து பார்க்கும் போதே பரவசம் தொற்றுகிறதே…இறைவா…! நட்பின் ஆற்றல் அளவிடற்கரியது!
பிரபல ஸ்தபதிகள் கீர்த்திவர்மன்,பாஸ்கரன், மருதமலை மகேஷ்,முருகன்..கற்சிற்பத்திற்கு படித்து எழுத்து சிற்பியாகிப் போன விகடன்அறிவழகன், சென்னையின் ’கேட்வே’ சிவகுமார், ’பேங்கர்’ சிவகுமார், இவர்களின் இணையர்கள்..என குடும்பத்துடன் ஒரு இனிய சந்திப்பு!
நீதிபதி மாகாதேவன், மருவத்தூர் அன்பழகன் தொடங்கி மல்லை சத்தியா வரையிலான விஐபிக்கள் காட்டிய ஈடுபாட்டுடன் காட்டிய பங்கேற்பு,சுவையான விருந்து என பல சிறப்புகள் இருந்தாலும், மனதை தொட்ட சம்பவம் புதுச்சேரி ஆதவற்றோர் இல்ல சிறார்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்களுக்கு புத்தாடை கொடுத்து,அனைவரோடும் விருந்தில் அமர்த்தி உபசரித்து அவர்கள் அனைவருக்கும் தங்கள் குடும்ப விழாவில் பங்கெடுத்த உணர்வை தந்து அனுப்பி வைத்ததை முக்கியமாக பார்க்கிறேன்.
ஏனெனில், நம்மில் பலரும் உணவு ஏதேனும் மீந்து போனால் மட்டுமே ஆதரவற்றோர் இல்லம் குறித்த ஞாபகம் வரப் பெறுகிறோம். ஆனால், நண்பர் மகேஷ் பல மாதங்களுக்கு முன்பே அவர்களுக்கு அழைப்பு தந்து, அவரவர்க்கு ஏற்ற அளவுகளில் உடை தைத்து தந்து என மெனக்கெட்டுள்ளார்.
வாழ்க மணமக்கள் சுவாதி- விக்னேஷ்!
ஒவ்வொரு செல்வந்தரும் இப்படி தங்களது அளப்பரிய கல்யாண செலவில் ஒரு ஐந்து சதவிகிதத்தை அர்த்தமுடன் செலவழித்தாலே போதுமே..!

1 கருத்து:

Unknown சொன்னது…

ஐயா எனக்கு திருமணம் அழைப்பிதழ் ஓலைச்சுவடியில் தயாராக்கா எந்தா இடத்தில் உள்ளது என்று கூற முடியுமா
Cell number and whatsapp number 7373598563