ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ... மனித உரிமைகள் கோவிந்தா கோவிந்தா ...


tamil.oneindia.com - veerakumaran : ஸ்ரீநகர்: தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1975ம் ஆண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், தென்மண்டல ஐஜியாக பதவி வகித்தபோது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளில் உச்சத்தில் இருந்த ஜாதி கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றினார். சந்தனக் கடத்தல் மன்னன், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, இவரது தலைமையிலான அதிரடிப்படையினர்தான் வீரப்பனை சுட்டுக் கொன்றனர். இதனால் நாடு முழுக்க புகழ் பெற்றவர் விஜயகுமார்.
2010 ல் சத்தீஸ்கரில் உள்ள டன்டேவாடாவில் நடந்த நக்சலைட் தாக்குதலில் 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து விஜயகுமார் சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் இப்பகுதியில் நக்சலைட் நடவடிக்கைகள் பெரிதும் குறைத்து ஒடுக்கப்பட்டன.
தற்போது, விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் ஆளுனர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பட ஆரம்பிக்கும்.

அதில், ஜம்மு காஷ்மீர் முதல் துணை நிலை ஆளுநராக விஜயகுமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல பீகாரை சேர்ந்த 1974ம் ஆண்டு கேரளா பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் ஷர்மா பெயரும் இதே பதவிக்கான போட்டியில் உள்ளது.
மத்திய உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர் இவர். காஷ்மீர் குறித்த ரகசிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்கும் பொறுப்பில்தான் இப்போதும் உள்ளார்.
வனப்பகுதிகளில் நக்சல் நடவடிக்கைகளை கண்டறிவது, ஒடுக்குவது போன்றவற்றில் திறமையானவர் விஜயகுமார் என்பதால், அவருக்குதான், ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

கருத்துகள் இல்லை: