திங்கள், 12 ஆகஸ்ட், 2019

மேட்டூர் அணை 90 அடியை தாண்டுகிறது.. வீடியோ


தினமலர் : சேலம் : மேட்டூர் அணை ஒரே நாளில் 18 அடி உயர்ந்து உயர்ந்து 85 அடியை எட்டி உள்ளது.
பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.,11) அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 18 உயர்ந்து 85 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை: நாளை திறப்பு அணையின் நீர் இருப்பு 45 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் இன்று (ஆக.,12) மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருவதால் நாளை (ஆக.,13) காலை 8 மணிக்கு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 1.51 லட்சம் கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை: