

tamil.oneindia.com - shyamsundar : பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநாவில் உள்ள முக்கிய நாடுகளிடம் முறையிட உள்ளதாக சீனா முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக தனியாக ஆலோசிக்க அழைப்பும் விடுத்துள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பற்றி உலக நாடுகள் பெரியதாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இது உலக அளவில் பிரச்சனையாகி வருகிறது.
இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பாதுகாப்பு ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தரப்பில் இருந்து கடிதமும் அளித்துள்ளது. பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக