tamilthehindu :பாறையில் படிந்துள்ள தங்கத்தை காட்டும தொழிலாளர் ;படம் உதவி: ரோஹன் டி பிரேம்குமார்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், தேவலா, பந்தலூர் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக
ரகசியமாக சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு
வருவது தெரியவந்துள்ளது.
ஊட்டியில் இருந்து 70 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த தங்கச்சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலையின்மை, குறைவான கூலி காரணமாக தேவலா, பந்தலூர் பகுதியைச் சுற்றி இருக்கும் மக்கள் உயிரைப் பணயம் வைத்து,மிகுந்த ஆபத்தான சுரங்கம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தின் அளவு குறைவாக
இருந்தபோதிலும், மிக சுத்தமாக இருப்பதால் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் ஆபத்தான பணியாக இருந்தாலும், தங்களை
ஆர்வத்துடனும், ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
பந்தலூர்-தேவலா பகுதியில் செயல்படும் 10-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு ஷிப்டுக்கும் 12க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தலையில் பேட்டரி லைட்டுடன், தோளில் சுத்தியல், கயிறுகளுடன், தங்கத்தை தேடி அந்த குகைக்குள் அலைந்து திரிகின்றனர்.
எந்த நேரத்தில் என்ன நடக்கும், விஷபூச்சிகள், பாம்புகள் எப்போது கடிக்கும், இயற்கை பேரிடர்கள் எப்போது ஏற்படும், பாறைகள் எப்போது சரிந்து விழும் என்கிற எந்த அச்ச உணர்வும் இன்றி, வெறும் வயிற்றுப் பிழைப்பாக மட்டும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வைத்து அங்கு ஒரு கும்பல் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகின்றது.
இந்த பகுதிக்கு அடிக்கடி வரும் லாரி டிரைவர் முரளி கூறுகையில், ‘‘இந்த பகுதியில் தங்கச்சுரங்கம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். நான் கூட பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால், மலையின் சரிவு, பள்ளத்தைப் பார்க்கும் போது பயமாக இருந்ததால் திரும்பி வந்துவிட்டேன்’’ எனத் தெரிவித்தார்.
இந்த சுரங்கம் வெட்டும் தொழிலில் கடந்த 20ஆண்டுகளாக இருக்கும் மாரியப்பன்(வயது65) கூறுகையில், ‘ ரொம்ப ஆபத்தான வேலை சார் இது. ஆனால், வேறுவேலை எங்களுக்கு கிடைக்காததால், இந்த சுரங்கம் வெட்டும் தொழிலைச் செய்கிறோம். தேயிலைத் தோட்டத்தில் என்னதான் உயிரைக் கொடுத்து உழைத்தாலும் கிடைக்கும் கூலி குறைவாக இருக்கிறது.
அதனால, இந்த வேலைக்கு மாறிவிட்டோம். 8 பேர் சேர்ந்து கூட்டமாக சுரங்கத்துக்குள்ளே போவோம். சில நேரங்களில் ஒருவாரம் கூட அங்கேயே தங்கிவிடுவோம். மழை, வெயில், பனி எதுவும் பார்க்காமல் உள்ளேயே இருப்போம்.
சாப்பாடு, குளிருக்கு போர்திக்கொள்ள கம்பளி, புகையிலை, மது, பீடி, சிகரெட், தீப்பெட்டி என எல்லாவற்றையும் கொண்டு சென்று அங்கேயே வைத்துக் கொள்வோம். எங்களுக்கு தேவையான தண்ணீர் சுரங்கத்தில் இருந்து வரும் ஊற்று நீரை பயன்படுத்திக்கொள்ளோம். ரேஷன் அரிசியில் செய்த கஞ்சியும், கருவாட்டையும் கடித்துக்கொண்டு அந்த சுரங்கத்துக்குள் இருப்போம்’ எனத் தெரிவித்தார்.
இந்த சுரங்கத்தில் உள்ள மூத்த பணியாளர் பிரஜித் கூறுகையில், ‘இந்த சுரங்கத்தில் இருந்து ஒருவாரம் வேலை செய்து ஒரு நபர் 30 கிலோ வரை தங்கத் தாதுக்கள் படிந்த பாறைகளை எடுத்துக்கொண்டு வருவார்கள். என்னதான் நாங்கள் உழைத்தாலும் சில நேரங்களில் ரூ.2ஆயிரம் கூலி கிடைக்கும், அல்லது நல்ல தங்கமாக கிடைத்தால், ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம்வரை கிடைக்கும். அதிர்ஷ்டத்தைப் பொருத்தது’ என்று தெரிவித்தார்.
இந்த சுரங்கத்தில் உயிரை பணயம் வைத்து தொழிலாளர்கள் கொண்டு வரும் தங்கத் துகள் படிந்த கற்களை விலை கொடுத்து வாங்குவதற்கு தனியாக கேரளாவிலும், தமிழகத்திலும் புரோக்கர்கள் உள்ளனர். சில நேரங்களில் ஒரு சில தொழில்முனைவோர்கள் சொந்தமாக சுரங்கம் வைத்து அதில் ஆட்களை வேலை செய்ய வைக்கிறார்கள்.
சமீபத்தில் சுரங்கத்தில் பணியாற்றும் 11 தொழிலாளர்கள் கொண்ட குழு ஏறக்குறைய ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்று அப்பகுதி தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது வெளிஉலகத்துக்கு தெரியாமல் மூடிமறைக்கப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த பைசல் என்பவர் சொந்தமாக 5 சுரங்கங்கள் வைத்துள்ளார். இவரின் சுரங்கத்தில்தான் ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாறைகளில் தங்கம் இருப்பதை கண்டுபிடிக்கும் எந்திரத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் முயற்சியில் தற்போது பைசல் ஈடுபட்டுள்ளார். தற்போது பாறைகளில் தங்கம் இருக்கும் என ஊகித்து வெட்டி எடுத்து வருகிறார்கள். எந்திரம் வந்துவிட்டால், ஊகித்து வெட்ட வேண்டிய அவசியம் இல்லை, எந்திரமே கண்டுபிடித்துவிடும் என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த சுரங்க அதிபர் பைசல், சுரங்கத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளையும், அவர்களின் குடும்பத்தின் பணத் தேவைகளையும் பார்த்துக் கொள்வதால், இவரின் கீழ் தொழிலாளர்கள் கவலையில்லாமல் பணியாற்றுகிறார்கள்.
இந்த சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கம் 99 சதவீதம் சுத்தமாக இருக்கும் என்று தொழிலாளர்கள் கூறுகிறார்கள். பாறைகளில் படிந்திருக்கும் இந்த தங்கத் துகள்களை ஒருவிதமான ரசாயத்தின் மூலம் உருக்கி, சுத்தம் செய்யும்போது, தங்கம் தனியாக பிரிந்துவிடும்.
முழுமையாக சுத்தம் செய்யப்படாத இந்த தங்கத்தை தமிழகம், கேரளாவில் இருந்து வரும் இடைத்தரகர்கள் கிராம் ரூ.ஆயிரம் முதல் ரூ.1500 வரை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
5 சுரங்கங்களுக்கு உரிமையாளரான பைசல் அப்பகுதியில் மிகுந்த செல்வாக்குள்ள நபராக வலம் வருகிறார். காடுகளில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள், பறவைகளைக் கூட சதாரணமாக வேட்டையாடும் சம்பவங்கள் நடக்கின்றன.
வனத்துறைக்கும், போலீஸாருக்கும் தேவையானவற்றை 'கவனித்து' விடுவதால் இங்கு வனவிலங்கு வேட்டையாடுதல் என்பது இயல்பானதாக இருந்து வருகிறது. காட்டுப்பன்றி, உடும்பு, மந்தி, மான், பழம்தின்னி வவ்வால் ஆகியவை எளிதாக சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது. ஆனால், இதை வனத்துறையினர் கண்டுகொள்வது இல்லை.
சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் இந்த சுரங்கங்களில் இது வரை தொழிலாளர்களின் மரணங்களும், விபத்துக்களும் வெளி உலகத்துக்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளன என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 15 தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் நடந்த விபத்துக்களில் சிக்கி பலியாகியுள்ளனர். ஆனால், வெளி உலகத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான தகவல் இல்லாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக, இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.)
தமிழில்: கே. போத்திராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக