மின்னம்பலம்: அகில
இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில், மூத்த தலைவரும் முன்னாள்
மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை யாரும் கண்டுகொள்ளாத சம்பவம் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு ஆப்ரிக்கா தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் சீனா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா, பாலஸ்தீனம் என சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன.
தலைமைப் பொறுப்பேற்று முதல் மாநாடு நடத்தும் ராகுல் காந்திக்குத் துணையாக அவரது சகோதரி பிரியங்கா இருந்துள்ளார். மாநாடு அரங்கத்துக்குள் தலைவர்கள் இருக்கைகள், ஒலி பெருக்கிகள் எங்கெங்கே பொருத்தப்படவேண்டும், ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என அனைத்தையும் பார்த்து பார்த்துச் செய்தவர் பிரியங்கா காந்திதான். ஆனால், இன்றைய மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை.
மாநாட்டு அரங்கத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
அகண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தாலும் மேடையில் யாரும் அமரவில்லை அதற்கான இருக்கைகளும் போடப்படவில்லை பேசுபவர் மட்டும் மேடையில் நின்று பேசிவிட்டு கிழே இறங்கிவந்து நிர்வாகிகளுடன் இருக்கையில் அமர்ந்துகொள்ளவேண்டும் என்றே திட்டமிடப்பட்டிருந்தது.
மாநாட்டில் டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்மக்ஹான் வரவேற்பு உரையாற்றினார். மாநாட்டைத் துவக்கிவைத்து பேசிய ராகுல் காந்தி கிழேவந்து தனது அம்மா சோனியா அருகில் அமர்ந்துகொண்டார்.
முன் வரிசையில். ராகுல், சோனியா, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோனி, குலாம்நபி ஆசாத், கமல்நாத், ப.சிதம்பரம், சிண்டே, ஆனந்த சர்மா முன் வரிசையிலும், இரண்டாவது வரிசையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையா போன்ற பிரமுகர்களும், நான்காவது வரிசையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு போன்றவர்களும் அமர்ந்தார்கள்.
தீர்மானம் வாசிப்புக்கு முன்பு மன்மோகன் சிங் சோனியாவிடம் ஏதோ பேசினார். உடனே அரங்கத்துக்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வி.வி.ஐ.பி ஓய்வு அறைக்குச் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் மூவரும் சென்றனர்.
அவர்கள் பின்னால் ப.சிதம்பரம் சென்றதைக் கவனித்த ராகுல், மன்மோகன் சிங்கிடம் ஏதோ பேசினார், உடனே மன்மோகன் சிங் ப.சிதம்பரத்தை வெளியில் வெயிட் பண்ண சொல்லியுள்ளார். இதையடுத்து, இறுகிய முகத்துடன் திரும்பிய சிதம்பரம் தனது இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டு கால்மேல் கால்போட்டுக்கொண்டு டென்ஷனுடன் விரல் நகத்தை கடித்தபடியிருந்தார். இதேபோல், மாநாட்டில் பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. ஆனால் ஒரிடத்திலும் கார்த்தி சிதம்பரம் பற்றியோ பாஜக சிதம்பரத்தை பழி வாங்கிறது என்றோ கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய பிரச்சனை பற்றி ஆலோசனை செய்த மூவரும் 10 நிமிடத்துக்கு பிறகு வெளியில் வந்தார்கள். இதையடுத்து 16 பக்கம் அடங்கிய அரசியல் தீர்மானங்கள் குறித்து நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் மல்லிக்கா அர்ஜுன் கார்க்கே எம்.பி விளக்கிப் பேசினார். மாநாட்டில் பேசியவர்கள், “பாஜக முத்தாலாக் கொண்டுவந்து முஸ்லிம்களை அழிக்கிறது., தலித்களை அழித்துவருகிறது, விவசாயத்தை அடியோடு அழித்துவருவதோடு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை முழுமையாக ஒழித்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்தனர்.
மதியம் 1.30 மணிக்கு உணவுக்காக மாநாட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. உணவைப் பொறுத்தவரை தென் இந்திய உணவுகள், வட இந்திய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கர்நாடக தேர்தலுக்கு பின் வெல்வோம்
பின்னர், மாலை 3.10க்கு சோனியாகாந்தி மேடையேறினார். சவாலான நேரத்தில் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் ஏற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். காங்கிரஸ் என்பது அரசியல் கட்சியல்ல, அது ஒரு இயக்கம். ஆட்சிக்கு வருவதற்காகப் பிரதமர் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸைப் பலப்படுத்துவதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்திய சோனியா “ பாகுபாடு, அரசியல் பழிவாங்குதல் மற்றும் ஆணவத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுதலை அடையச் செய்ய வேண்டும். தற்போதைய ஆட்சியால் ஏற்படும் சவால்களுக்கு எதிராகப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், “கர்நாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி பெற்ற வெற்றியால் காங்கிரஸ் பலம் வாய்ந்த கட்சியாக மாறியது. தற்போதைய கர்நாடக தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் எழுச்சியடையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசும்போது, “இந்த மாநாட்டின் நோக்கம் 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எப்படி நாம் தயாராவது, காங்கிரஸ் கட்சி எப்படி செல்வது ஆகியவற்றை ஆலோசிப்பதாகும். ஆனால், நாட்டில் தற்போது முக்கியப் பிரச்சினைகளான இருக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப வெறுப்புணர்வை ஆயுதமாக மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்துகிறது.
பாதையை நோக்கி இந்நாட்டு காத்திருக்கிறது. காங்கிரஸால் மட்டுமே அந்தப் பாதையை காட்ட முடியும். பாஜக வெறுப்புணர்வைப் பயன்படுத்துகிறது. நாங்கள் அன்பைப் பயன்படுத்துகிறோம். காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மட்டும் நாட்டை ஒற்றுமைப்படுத்தும், முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்.” என்று பேசினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக