மாலைமலர் :தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போடி அருகே&
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் இன்று 25 கல்லூரி மாணவிகள் மடை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 25 மாணவிகளும் இதில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 9 பேர் மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார் தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக