Gajalakshmi Oneindia Tamil
வர்ணாசிரமத்தின் படி கீழ் சாதி எது?-சிபிஎஸ்இ கேள்வியால் சர்ச்சை!- வீடியோ
சென்னை
: மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான
கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள
கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகளை வளர்க்கும் வகையில் விஷத்தை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக்கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள்
மத்தியில் விஷத்தை விதைக்கும் வகையில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக
சர்ச்சை வெடித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்வித் தாள் வேகமாக
பரவி வருகிறது.
மாணவர்கள்
மத்தியில் விஷத்தை விதைக்கும் வகையில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக
சர்ச்சை வெடித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்வித் தாள் வேகமாக
பரவி வருகிறது. ஆர்எஸ்எஸ்இன் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட
பாட்டத்திட்டம் இது. நாளை இதுதான் அவர்கள் முன்வைக்கப் போகும் அரசியல்
சட்டம் என்று வழக்கறிஞர் அருள்மொழி தன்னுடைய முகநூல் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.
6ம்
வகுப்பினருக்கு அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே கேள்வித் தாள்களை வடிவமைத்துக்
கொள்கின்றன. எனினும் என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள பாடநூலின் அடிப்படையிலேயே இந்தக்
கேள்வி கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.
இது போன்ற கேள்வி வடிவமைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிஞ்சு வயதிலேயே மாணவர்கள் மனதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற விஷத்தை விதைக்கும் சிபிஎஸ்இயின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகளை வளர்க்கும் வகையில் விஷத்தை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக்கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன.
சமூகவலைதளங்களில் வைரல்
வழக்கறிஞர் அருள்மொழி பதிவு
கல்வியாளர்கள் எழுப்பும் கேள்வி
சாதி வேறுபாடு எனும் விஷம்
பிஞ்சு வயதிலேயே மாணவர்கள் மனதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற விஷத்தை விதைக்கும் சிபிஎஸ்இயின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக