Prasanna VK - GoodReturns Tamil
இந்தியாவில், ஏன் உலகளவில் அதிகளவிலான சம்பளம் அளிக்கும் துறை என்றால் இது
ஐடி அல்லது டெக் துறை என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம்.
இத்துறையில் யார் அதிகமாகச் சம்பளம் தருவது என்று நிறுவனங்கள் மத்தியில் பல
வருடங்களாகப் போட்டி போட்டு வருவது எத்தனை பேருக்கு தெரியும்?. கூகிள்
நிறுவனத்திற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட்டும், அதற்குப் போட்டியாகப்
பேஸ்புக்கும் என இந்தப் போட்டி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
அட இந்த 3 நிறுவனங்கள் மட்டும்தான் அதிகம் சம்பளம் கொடுக்கிறதா என்றால்
இல்லை, உலகில் பல நிறுவனங்கள், பேஸ்புக், கூகிள் நிறுவனங்களுக்கு அதிகமான
சம்பளத்தை அளிக்கிறது. இந்த வகையில் 2017ஆம் ஆண்டில் எந்த நிறுவனம்
எவ்வளவும் சம்பளம் அளிக்கிறது என்பதைத் தான் இப்போது பார்க்கபோகிறோம்.
கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்..
கடுப்ப கிளப்பாதீங்க பாஸ்..
இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக
சம்பள உயர்வு மிகவும் குறைவான அளவே அளித்து வரும் நிலையில், இத்துறை
ஊழியர்களுக்கு அடுத்து எந்த நிறுவனத்திற்கு மாறலாம் என்பதற்கு இந்தக்
கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரி வாங்க பார்போம்.
கிளாஸ்டோர்
கிளாஸ்டோர்
உலகளவில் இருக்கும் நிறுவனங்களின் சம்பளம், ஊழியர்கள், பணியிடம் எனப்
பலவற்றையும் அந்த நிறுவனத்திற்குள் போகாமலேயே பிற ஊழியர்களின் வாயிலாகப் பல
விஷயங்களை அளித்து வரும் கிளாஸ்டோர்.
2017ஆம் ஆண்டுக்கான அதிகச் சம்பளம் அளிக்கும் 25 நிறுவனங்களைப்
பட்டியல்போட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில்
குறைந்தபட்ச சம்பளமே 1,20,000 டாலர்.
பிராகேட்
பிராகேட்
கம்பியூட்டர் ஸ்டோரேஜ் நெட்வொர்க் மற்றும் கம்பியூட்டர் நெட்வொர்கிற்கான
உபகரணங்களை உற்பத்தி செய்யும் பிராகேட் நிறுவனம் இப்பட்டியலில் 25வது
இடத்தைப் பிடித்துள்ளது.
2016 நவம்பர் மாதத்தில் பிராகேட் நிறுவனத்தை Broadcom கைப்பற்றியது
குறிப்பிடத்தக்கது.
சராசரி மொத்த சம்பளம்: $136,010
சராசரி அடிப்படை சம்பளம்: $122,000
சைலினெக்ஸ்
சைலினெக்ஸ்
புதிய மென்பொருளை இயக்க கூடிய programmable chipஐ தயாரிக்கிறது இந்த
வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம்.
சராசரி மொத்த சம்பளம்: $1,37,000
சராசரி அடிப்படை சம்பளம்: $1,19,348
அடோப்
அடோப்
கிரியேடிவ் மற்றும் மார்கெட்டிங் துறைக்குப் பிரத்தியேகமாக மென்பொருளை
தயாரித்தும் வடிவமைக்கிறது அடோப் நிறுவனம்.
இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என ஒரு
ஆய்வு கூறுகிறது.
சராசரி மொத்த சம்பளம்: $1,38,000
சராசரி அடிப்படை சம்பளம்: $1,23,000
மேடாலிாய
மேடாலிாய
உலகளவில் வாடிக்கையாளர் சேவையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்ற
நிறுவனங்களில் மேடாலிாய நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
மேலும் இந்நிறுவநம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு,
வாடிக்கையாளர் கருத்தை கொண்டு ஆய்வு செய்யும் மார்கெட்டிங் துறைக்குப்
பயன்படுத்தும் மென்பொருளை மிகப்பெரிய அளவில் தயாரித்து வெற்றி பெற்றுள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $1,38,750
சராசரி அடிப்படை சம்பளம்: $1,33,500
டிராப்பாக்ஸ்
டிராப்பாக்ஸ்
கிளவுட் சேவையிலும், கிளவுட் ஸ்டோரேஜ் துறையிலும் முன்னோடியான ஒரு நிறுவனம்
டிராப்பாக்ஸ்.
சராசரி மொத்த சம்பளம்: $140,000
சராசரி அடிப்படை சம்பளம்: $118,500
அகாமாய்
அகாமாய்
உலக நாடுகளில் இருக்கும் மகிப்பெரிய இணையதளங்களை மிகவும் வேமாக இயக்க
வைப்பதில் அகாமாய்ச் சூப்பர்ஸ்டார். மேலும் இந்நிறுவனம் உலகச் சந்தையில்
கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் ஆக அறியப்படுகிறது.
சராசரி மொத்த சம்பளம்: $140,000
சராசரி அடிப்படை சம்பளம்: $121,000
பால் ஆல்டோ நெட்வொர்க்ஸ்
பால் ஆல்டோ நெட்வொர்க்ஸ்
கம்பியூட்டர் பாதுகாப்பு சாதனைகளை வடிவமைக்கும் நிறுவனம் பால் ஆல்டோ
நெட்வொர்க்ஸ். இந்நிறுவனம் கடந்த சில வருடங்களில் அமெரிக்கச் சந்தையில்
மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சராசரி மொத்த சம்பளம்: $140,020
சராசரி அடிப்படை சம்பளம்: $124,700
எப்5 நெட்வொர்க்ஸ்
எப்5 நெட்வொர்க்ஸ்
கார்பரேட் நெட்வொர்க்-ஐ வேகமாக இயக்க வைக்கும் உபகரணங்கள் மற்றும் சேவையை
அளிக்கும் எப்5 நெட்வொர்க்ஸ் கிலாஸ்ரோர் செய்த ஆய்வில் 18வது இடத்தைப்
பிடித்துள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $140,555
சராசரி அடிப்படை சம்பளம்: $125,000
டிவிட்டர்
டிவிட்டர்
மைக்ரோ பிளாகிங் பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கும் டிவிட்டர் அதிர்ச்சி
அளிக்கும் வகையில் அதிகச் சம்பளம் அளிக்கும் அமெரிக்க நிறுவனங்கள்
பட்டியலில் 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $142,000
சராசரி அடிப்படை சம்பளம்: $125,000
வால்மார்ட் லேப்ஸ்
வால்மார்ட் லேப்ஸ்
உலகளவில் ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும்
வால்மார்ட் நிறுவனத்தின் மென்பொருள் வர்த்தகப் பிரிவு தான் இந்த வால்மார்ட்
லேப்ஸ்.
வால்மார்ட் நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து மென்பொருள் சேவைகளை
வால்மார்ட் லேப்ஸ் நிறுவனம் தான் அளிக்கிறது.
சராசரி மொத்த சம்பளம்: $143,500
சராசரி அடிப்படை சம்பளம்: $124,900
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்
அட உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட்
நிறுவனம் இந்த 15 வது இடத்தில் உள்ளது.
விண்டோஸ் ஓஎஸ், எக்ஸ்பாக்ஸ், சர்பேஸ் பிசி எனப் பல வர்த்தகத்தில்
ஈடுப்பட்டுள்ள இந்நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றித்
தெரிந்துக்கொள்ள யாருக்கு தான் விருப்பம் இருக்காது. அதை விட இப்போது
இப்படியலில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவன எது தெரியுமா..?
சராசரி மொத்த சம்பளம்: $144,000
சராசரி அடிப்படை சம்பளம்: $127,000
பிராட்காம்
பிராட்காம்
சிப் தயாரிப்பு முதல், மென்பொருள் வடிவமைப்பு முதல் பல முக்கியத் துறையில்
சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் பிராட்காம்.
சராசரி மொத்த சம்பளம்: $145,025
சராசரி அடிப்படை சம்பளம்: $130,000
இன்ஃபர்மேடிகா
இன்ஃபர்மேடிகா
தற்போது உலகளவில் வளர்ந்து வரும் பிக் டேட்டா மென்பொருள் சேவை அளிக்கிறது
இன்ஃபர்மேடிகா.
சராசரி மொத்த சம்பளம்: $147,400
சராசரி அடிப்படை சம்பளம்: $125,000
சினாப்சிஸ்
சினாப்சிஸ்
செமிகன்டாக்டர் துறைக்கான மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான சினாப்சிஸ்
தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைப் பாருங்க.
சராசரி மொத்த சம்பளம்: $148,000
சராசரி அடிப்படை சம்பளம்: $130,000
டைமென்ஷன் டேட்டா
டைமென்ஷன் டேட்டா
எண்டர்பிரைஸ் ஆப்ஸ், கிளவுட் கம்பியூடிங், கம்பியூட்டர் செக்கூரிட்டி எனப்
பல பிரிவில் இயங்குகிறது இந்தக் கண்சல்டிங் நிறுவனம்.
சராசரி மொத்த சம்பளம்: $150,000
சராசரி அடிப்படை சம்பளம்: $110,000
லேச்ஸ்போர்ஸ்
லேச்ஸ்போர்ஸ்
தமிழ்நாட்டின் ZOHO நிறுவனத்தை வாங்க பல ஆண்டுகளாகத் துடித்துக்கொண்டு
இருக்கும் லேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இப்பட்டியலில் 10வது இடத்தைப்
பிடித்துள்ளது.
இனி வரும் நிறுவனங்களைத் தான் ஐடி ஊழியர்களைத் தங்களது டார்கெட்டாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
சராசரி மொத்த சம்பளம்: $150,000
சராசரி அடிப்படை சம்பளம்: $120,000
லிங்டுஇன்
லிங்டுஇன்
தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் முக்கியச் சமுக வலைதளமாக இருக்கும்
லிங்டுஇன் வெறும் இணைப்பாக மட்டும் அல்லாமல் வேலை தேடுபவர்களுக்கும், வேலை
அளிப்பவர்களுக்கும் ஒரு தளமாக உள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $150,000
சராசரி அடிப்படை சம்பளம்: $127,000
ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ்
ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ்
கார்பரேட் நெட்வொர்க்ஸ் மற்றும் நெட்வொர்க் சேவைகளை அளிக்கும் முன்னணி
நிறுவனம் தான் ஜூனிப்பர் நெர்வொர்க்ஸ்.
சராசரி மொத்த சம்பளம்: $150,000
சராசரி அடிப்படை சம்பளம்: $138,500
அமேசான் லேப்
அமேசான் லேப்
அமெரிக்கச் சந்தையில் வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்தியாவில்
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு எதிராகத் தனது அமேசான் ஈகாமர்ஸ் தளத்தை
வலிமையாகாக்கு பணிகளைச் செய்து வருகிளது அமேசான் லேப். இதுமட்டும் இல்லாமல்
உலகளவில் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவையை உருவாக்கியதும் அமேசான்
லேப் தான்.
சராசரி மொத்த சம்பளம்: $152,800
சராசரி அடிப்படை சம்பளம்: $130,400
என்விடியா
என்விடியா
நீங்கள் மேக் பிரியராக இருந்தால் இந்த நிறுவனம் உங்களுக்குக் கண்டிப்பாகத்
தெரிந்திருக்கும். வெறும் கேபி, எம்பிக்களில் இருந்த கம்பியூட்டர் கேம்கள்
இன்று ஜிபி, டிபி கணக்கில் வளர்ந்து நிற்கிறது.
இதனை இயக்க சாதாரணக் கம்பியூட்டரோ, அல்லது பிராசசரோ போதாது. இதற்காகப்
பிரத்தியேக் மென்பொருள் மற்றும் பிராசசர் தேவை. இதனைத் தயாரிக்கும்
நிறுவனம்தான் என்விடியா.
சராசரி மொத்த சம்பளம்: $154,000
சராசரி அடிப்படை சம்பளம்: $150,000
பேஸ்புக்
பேஸ்புக்
வந்தாச்சு. காலை எழுந்தவுடன் நாம் பார்க்க தூண்டும் முன்னணி சமுக வலைதளமான
பேஸ்புக் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $155,000
சராசரி அடிப்படை சம்பளம்: $130,000
கூகிள்
கூகிள்
இண்டர்நெட் தேடுதல் சேவை மட்டும் அல்லாமல் கடந்த சில வருடத்தில் பல
முக்கியத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் கூகிள் நிறுவனம் டாப் 5
நிறுவனங்களுக்குள் நுழைந்திருப்பது பெரிய விஷயமில்லை.
அப்போ நிறுவனம் தான் முதல் இடத்தில் உள்ளது.?
சராசரி மொத்த சம்பளம்: $155,250
சராசரி அடிப்படை சம்பளம்: $120,000
கேடென்ஸ்
கேடென்ஸ்
உலகப் பொருளாதாரத்தின் முதுகெழுப்பாக இருக்கு தொழிற்துறைக்குத் தேவையான
மென்பொருளை மிகச் சிறந்த முறையில் தயாரிக்கும் ஒரு நிறுவனம் என்றால் அது
கேடென்ஸ் தான்.
ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் 3வது
இடத்தில் இருக்கும் நிறுவனம் கேடென்ஸ்.
சராசரி மொத்த சம்பளம்: $156,702
சராசரி அடிப்படை சம்பளம்: $141,202
Splunk
Splunk
அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் ஐடி இன்பராஸ்டக்சர் உதவி இல்லாமல் இயங்க
முடியாது. அதேபோல் இதைக் கவனித்துக்கொள்வது மிகவும் கடினமான வேலை.
இதனை எளிமையாகக் கண்காணிக்கும் வகையில் பிக் டேட்டா மென்பொருள் மற்றும்
வன்பொருளை தயாரிக்கும் ஒரு நிறுவனம்தான் Splunk. இந்நிறுவனம் இப்பட்டியலில்
2வது இடத்தைப் பிடித்துள்ளது.
சராசரி மொத்த சம்பளம்: $161,010
சராசரி அடிப்படை சம்பளம்: $132,500
விஎம்வேர்
விஎம்வேர்
உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது. உலகளவில்
இருக்கும் மென்பொருள் மற்றும் டெக் நிறுவனங்களில் அதிகம் சம்பளம் அளிக்கும்
நிறுவனமாக விஎம்வேர் திகழ்கிறது
கம்பியூட்டர் சர்வர்கல் வேகமாக இயங்க சக்திவாய்ந்த மென்பொருளை உருவாக்கியது
மட்டும் அல்லாமல் உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகாமாக மென்பொருள்
நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் சேவையை நம்பியிருக்கும் நிலைக்கு விஎம்வேர்
உயர்ந்துள்ளது.
இத்தகைய நிலையில் இந்நிறுவன ஊழியர்களுக்கு அதிகமான சம்பளத்தைக் கொடுத்தே ஆக
வேண்டும்.
சராசரி மொத்த சம்பளம்: $167,050
சராசரி அடிப்படை சம்பளம்: $136,750
அமெரிக்கா
அமெரிக்கா
இந்தப் பட்டியலில் இருக்கும் பல நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் மட்டும்
இருந்தாலும் பல நிறுவனங்கள் இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளிலும்
உள்ளது. எனவே விரைவில் அதிகச் சம்பளம் அளிக்கும் நிறுவனங்களுக்கு நீங்கள்
மாற தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக