வியாழன், 15 மார்ச், 2018

குரங்கணி ..அனுமதி கொடுத்து விட்டு ஏன் வைத்தீர்கள் .. அரசே காட்டு தீ பரப்பியதாக மக்கள் சந்தேகம்?

Venkat Ramanujam :  பொட்டிபுரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே India-based Neutrino Observatory (INO)அமைக்க மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும்
அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி (டிடெக்டர்) அமைக்கப்படும். மரங்களை வெட்டாமல் இதனை செய்ய முடியாது .
இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், "இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என தொடர் போரட்டம் செய்தும் மனுவும் அளித்துள்ளனர்.
நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். இங்கு இத்திட்டத்தை உள்ளூர் மக்கள் எதிர்த்ததால் சமீபத்தில் அரசே காட்டு தீ பரப்பியதாக ஒரு சந்தேகம் வலுபெற்றுள்ளது.
கடுமையான வெயில் காலத்தில் மலைகளின் காடுகளில் தீப்பிடிக்கும், பொதுவாக அக்னி வெயிலில் - ஏப்ரல் இறுதி, மே மாதம். இப்போது அதற்க்கான வெப்பநிலை ஒன்றும் இல்லை என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் .இதன் மூலம் 12 பேரை பலிகொண்ட தேனி குரங்கணி காட்டு தீ அதன் நீட்சியே என கருத வேண்டியுள்ளது.
இந்த கட்டுரையின் நோக்கம் நியூட்ரினோ திட்டம் சரியா தப்பா என்பதில்லை. பிரான்ஸ் இந்த சோதனை நிறுத்தி விட்டது ஏன் என்றெல்லாம் கேக்க போவதில்லை
ஆனால் நமது வரி பணத்தில் ஓளிவு மறவின்றி செயல் பட வேண்டிய அரசாங்கம் ..
பொய் பொய்யாக சொல்லி புளுகி தள்ளி இருக்கிறது என்பதே உண்மை
தேனியில் நாங்க மலை எறும் போது காட்டுத்தீ கிடையாது ., முறையாக நபர் ஒருவருக்கு 200 ரூ கட்டி அனுமதி பெற்றே மலை எற செய்தோம் என்கிறது chennai trekking club (CTC)
இந்த செய்தி வெளிட்ட சில மணி நேரத்தில் 10 வருடமா செயல்பட்டு வரும் CTC நிறுவனர் , ஊழியர் வீடுகள் சோதனை கைது அதிரடியாக சென்னை காவல்துறை செய்கிறது .

இல்லஜி மோடியும் எடப்பாடியும் ஒபிஎஸ்ம் பச்ச மண்ணு .. திமுகவும் காங்க்ரஸ் தான் 100% காரணம் என்று சொல்ல போகிறவர்கள் பார்வைக்கு ஐந்து டைம்லைன் :
18 October 2010, the Ministry of Environment & Forests approved both environment and forest clearance for setting up the observatory in the Bodi West Hills Reserved Forest in the Theni district of Tamil Nadu.
February 2012, the land was allocated to the INO collaboration by the government of Tamil Nadu and the excavation work was about to start. The project is expected to be completed in 2015 at an estimated cost of ₹ 1,500 crores.
5 January 2015, Union Cabinet headed by Prime Minister Narendra Modi approved to set up the India-based Neutrino Observatory (INO).
20 February 2015, The southern bench of National Green Tribunal ordered notices to the central and state governments on a petition challenging the environmental clearance granted to the India-based Neutrino Observatory (INO) project.
26 March 2015, The Madurai bench of the Madras high court restrained the central government from commencing the work on the proposed India-based Neutrino Observatory (INO).
The court directed the government to get permission from the Tamil Nadu Pollution Control Board (TNPCB) before commencing the work
அதெப்படி #bjp #admk அரசே வேலையை தொடங்கிட்டு குரங்கணி காட்டுத்தீ சம்பவத்துக்கு மறுநாளே அரசு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டுவதன் மூலம் சந்தேகப்படமா இருக்க முடியும் ..
ஐயோ பாவம் ..பெண்கள் ,குழந்தைகள் கொண்ட 12 உயிர்கள் அனுமதி தராமல் திருப்பி அனுப்பி இருந்தால் சென்று இருப்பார்களே..
🦀 ஸ்வாதியை யார் கொன்னா தெரியாது ..
🦀 ராம்குமாரை யார் கொன்னா தெரியாது ..
🦀 ஜெயலலிதாவை யார் கொன்னா தெரியாது ..
🦀 அட்மீனை யாருன்னே தெரியாது ..
🦀 காட்டுத்தீ யார் வச்சா தெரியாது ..
மனசாட்சி உறுத்தவே உறுத்தாதா..
#குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே
அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து
விளக்கம் :குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
#forestfire #சவெரா #காட்டுத்தீ #forestfire

கருத்துகள் இல்லை: