Palanivel Manickam :
மாபெரும்
அறிவியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங் மறைந்த இந்த துயரமான நாளில் இந்திய
வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் அறிவியல் மேதையும்,சிந்தனையாளருமான
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த "மேகநாத் சாஹா" எனும் அணுசக்தி அறிவியலாளர்
பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். அணு விஞ்ஞானி என்றாலே தொழிலதிபர் டாடாவின்
உறவினர் ஹோமி பாபா என்பவர் தான் என இந்திய மனங்கள் நம்பும் காலங்களில்
அதற்கு முன்னரே அணு ஆற்றல் துறையில்(அணுசக்தி துறையில் நமக்கு மாறுபட்ட
கருத்துகள் உண்டு) பல ஆராய்ச்சிகள் செய்தவர் மேகநாத் சாஹா,உண்மையில்
இந்திய அணு ஆற்றலின் தந்தை என போற்றப்படவேண்டியவர் இவரே.1936-லேயே 'அணு
இயற்பியல் "(Atomic Physics) பாடத்தை கல்லூரி பாடத்தில் புகுத்தியவர்(காலம்
பிரிட்டிஷ்க்காரன் காலம்)அதே நேரம் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர்,
தன் தன்னம்பிக்கை மற்றும் அறிவாற்றலால் இந்திய அறிவியல் துறைக்கு பல
கொடைகளை வழங்கியவர்,ஆனால் ஏன் அந்த அறிவியலாளர் இந்திய வரலாற்றில் ஏன்
மறைக்கப்பட்டார் என்பதற்கு இரு காரணங்கள் முகமுக்கியமானவை.
1)தன் கல்வி அறிவால் அறிவியல் துறையில் முன்னேறி இந்து வேத மதத்தை, அதன் கொடூர வர்ணாசிரம கொடுமை தன் வாழுங்காலத்தில் எதிர்த்து போராடிய வர்ணாசிரம தர்மத்தின் படி பிரம்மனின் காலில் பிறந்தவர் என்பதாலும்,
2)வேத இந்துமதம் செய்த இன்னொரு கொடுமையான செயல் என்பது இந்திய மக்களின் கரத்தையும்(கையும்) சிரத்தையும்(தலை) வர்ணாசிரம ஜாதியின் பெயரால் இவற்றுக்கு இடைப்பட்ட இணைப்பை துண்டித்த செயலே அது, அறிவுக்கும், செயலுக்கும் இடைப்பட்ட இணைப்பை துண்டித்ததாலே இந்திய சமூகம் அடிமைப்பட்டுவிட்டது என ஆணித்தரமாக சிந்தனையை வெளிப்படுத்தி வாதிட்டவர் சாஹா,
" அறிவியல் அறிவு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானது,பலரும் பங்கேற்று உருவாக்கப்படக்கூடியது,எனவே இதில் 'இரகசியம்' என்ற பேச்சுக்கே இடமில்லை''' என்றவர் அறிவியல் சிந்தனையாளர் மேகநாத் சாஹா.
அறிவியலாளர் ஸ்டீபன் ஹோக்கிங்-ன் மறைந்த இந்த நாளில் இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட மாபெரும் தாழ்த்தப்பட்ட அறிவியலாளரை நினைவு கூர்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக