maalaimalar :உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்புர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. புதுடெல்லி:< உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார்.
கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. புல்புர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் தோற்கடித்தார். இந்த தொகுதியும் பா.ஜ.க வசம் இருந்தது
குறிப்பிடத்தக்கது. பீகாரின் அராரியா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் சுமார் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதே மாநிலத்தில் இரு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், பா.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக