திங்கள், 5 மார்ச், 2018

மத்திய பிரதேசம் .. இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிரோடோடு .. Brain-dead man found alive on autopsy table in MP hospita

Shyamsundar - Oneindia Tamil போபால்: மத்திய பிரதேசத்தில் இறந்து போனதாக உடற்கூறுக்கு எடுத்து செல்லப்பட்ட நபர், பிரேத பரிசோதனை அறையில் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹிமான்ஸா பரத்வாஜ் என்ற சிந்த்வாரா பகுதியை சேர்ந்த நபர்தான் இந்த அதிசயத்திற்கு சொந்தக்காரர். இவருக்கு நேற்று பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரை நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு இவரை காப்பற்ற முடியாது என்று கூறியுள்ளனர். மூளைச்சாவு மூளைச்சாவு இதையடுத்து அதே பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு இவர் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறார்.
அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவரது மூளை இறந்துவிட்டது என்றுள்ளார். இதயம் மட்டுமே துடிக்கிறது என்று கூறியுள்ளனர்.
 மரணம் ஆனால் கொஞ்ச நேரத்தில் இதயம் துடிப்பதும் நின்று இருக்கிறது. இதையடுத்து இவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.


அவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மரணம் அடையவில்லை மரணம் அடையவில்லை ஆனால் பிரேத பரிசோதனை செய்ய இருந்த மருத்துவர், அவரது இதயம் துடிப்பதை கவனித்து இருக்கிறார். இதையடுத்து அவர் மீண்டும் சோதனை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது மூளை செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் உயிரோடு இருக்கிறார் என்று மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிசயம் அதிசயம் இந்த நிலையில் அந்த மருத்துவமனை நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் மூளை சாவு அடைந்துவிட்டதாக கூறப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பலரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவரது உறவினர்கள் இது முழுக்க முழுக்க அதிசயம் என்று கூறி வருகிறார்கள்

 livemint.com
Chhindwara: In a real life incident that would otherwise happen only in reel life, a 24-year-old “brain-dead” man taken for autopsy in a government hospital in Madhya Pradesh on Monday was found to be alive, a medical officer said.
Himanshu Bharadwaj suffered head injuries after his motorcycle skidded off the road in Chhindwara city on Sunday, following which he was referred to Nagpur in neighbouring Maharashtra for treatment, said Dr Sushil Dubey, senior medical officer, Chhindwara district hospital.
He said the doctors at the Nagpur hospital declared Bharadwaj brain dead and sent him back to Chhindwara. “Bharadwaj’s family members then brought him back to the Chhindwara district hospital where doctors later declared him dead as his pulse was missing and he was showing no signs of life,” said Dr Dubey.
Bharadwaj was shifted to the mortuary of the hospital for postmortem on Monday afternoon. “However, when the mortuary sweeper was preparing the ‘body’ for postmortem, he suddenly noticed movement in Bharadwaj’s body. He immediately informed doctors who rushed to the mortuary and shifted Bharadwaj. He responded positively to the medical treatment,” said Dr Dubey.
Bharadwaj regained consciousness and his all vitals are found to be stable, he said, adding that Bharadwaj was again referred to Nagpur for better treatment. Alleging medical negligence, Bharadwaj’s relative Santosh Rajput demanded a stern action against the doctors concerned

கருத்துகள் இல்லை: