திங்கள், 5 மார்ச், 2018

நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன்


மாலைமலர் :நீங்கள் என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் உங்களிடம் எதிர்பார்ப்பேன் - கமல்ஹாசன் சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும். வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு?
எதிர்க்காலத்தை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும். அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அமைச்சர்களின் பிள்ளைகள், அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

மாற்றங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்தே துவங்க வேண்டும். தவறுகள் எல்லா அரசிலும் நிகழும். நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது. மக்களுக்கு உதவாத அரசு ஓட்டை படகுபோல் மூழ்கிவிடும்.
நீங்கள் என்னை தலைவர் என்று அழைக்க வேண்டாம். நான் உங்களை தலைவா என்று அழைக்க வேண்டும். நீங்கள் என்னிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அவர் அடையாள அட்டையை வழங்கினார்

கருத்துகள் இல்லை: