திங்கள், 10 செப்டம்பர், 2018

thenewsminute... இன் திமுக வெறுப்பு பிரசாரம் .. தன்யாவின் பார்ப்பனீய விஷம்

Ganesh babu ;திருவண்ணாமலையில் ரகுபதி என்பவர் தன் நண்பரோடு சேர்ந்து ஒரு
செல்போன் கடைக்குச் சென்று தகராறு செய்திருக்கிறார். இவர் தி.மு.கவில் இருக்கிறாராம். நிற்க
இந்த சம்பவத்திற்கும் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
இதுப்பற்றி 'The News Minute' என்கிற ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் எவ்வளவு வன்மம் பாருங்கள். (செய்திக்கான சுட்டி: பின்னூட்டத்தில்)
செய்தியின் முதல் வரியிலேயே, "தமிழ்நாட்டில் தி.மு.கவினர் அராஜகத்தில் ஈடுபட்டுவரும் மற்றுமொரு சம்பவம் நடந்திருக்கிறது" என்று ஆரம்பிக்கிறார்கள். (முதல் படம்)
இதைப் படிக்கும் வெளிமாநிலத்தவர்கள், 'தி.மு.கவினருக்கு தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எளிய மக்களிடம் வம்பிழுப்பதுதான் வேலை போலும்' என்றுதானே கருதுவார்கள்?
மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, சமூகநீதி, திராவிடம் என்று பார்ப்பனீய சக்திகளுக்கு உவப்பில்லாத கொள்கைகளை முன்னெடுக்கும் தி.மு.கவை, 'ஊழல் கட்சி', 'ரவுடி கட்சி', 'விடுதலைப் புலிகளை ஆதரித்த தீவிரவாதக் கட்சி' என்று நேரத்திற்கேற்ப தேசிய அளவில் தி.மு.கவை எதிர்மறையாக சித்தரிப்பது என்பது தி.மு.க மீதான தங்களின் அரிப்பை பார்ப்பனீய சக்திகள் தீர்த்துக்கொள்வதற்காகக் கையாளும் பல வழிகளுள் இதுவும் ஒன்று.

இதில் சம்பந்தமேயில்லாமல் விருகம்பாக்கம் பிரியாணிக் கடை சம்பவத்தை வேறு குறிப்பிட்டதோடு, அதில் சம்பந்தப்பட்ப யுவராஜ் என்பவரை "தி.மு.கவின் இளைஞரணி செயலாளர்" என்றும் கூச்சமேயில்லாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர் தி.மு.கவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(இரண்டாவது படம்)
இரண்டு பத்தி செய்தி எழுதினால், அதில் இரண்டு பெரிய பொய்களை எழுதிய இந்தப் பார்ப்பன பொறுக்கி ஊடகத்திற்கு, "விருகம்பாக்கம் சம்பவத்திற்குப் பிறகு யுவராஜ் என்பவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தி.மு.க" என்ற ஒற்றை உண்மையை சொல்லக்கூட வக்கில்லை. ....thenewsminute.com/

கருத்துகள் இல்லை: