வினவு :இந்தியாடுடேவின் 2018 செப்டம்பர் 10ஆம்தேதியிட்டஆங்கிலப்பதிப்பு “An Inconvenient Truth” என்றபெயரில்ஒருகவர்ஸ்டோரியைவெளியிட்டிருக்கிறது. அதன்சுருக்கமானதமிழாக்கத்தை
ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் முரளிதரன் விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார்.
அத்தொடரின் முதல் இரண்டு பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.
ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி.ராகிகடியில்இந்தஅணிஅகழ்வாராய்ச்சியைமேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள்பழமையானஎலும்புக்கூடுஒன்றுகிடைத்தது. அந்தஎலும்புக்கூட்டின்மண்டைஓட்டில்உள்ள Petrous bone என்றகாதுகளைப்பாதுகாக்கும்பகுதியைபிரித்தெடுத்து, அதிலிருந்துஅந்தஎலும்புக்கூட்டின்மரபணுஆராயப்பட்டது. அந்தஆராய்ச்சியின்முடிவுகள்சிலகேள்விகளுக்குப்பதில்அளித்திருக்கின்றன.
எல்லாமேமிகச்சிக்கலானகேள்விகள், பதில்கள். இந்தஆய்வின்முடிவுகள்விரைவில் Science இதழில்பதிப்பிக்கப்படவிருக்கின்றன.
2015லேயேஆய்வுமுடிந்துவிட்டதுஎன்றாலும்விவகாரம்அரசியல்ரீதியாகஉணர்ச்சிகளைத்தூண்டக்கூடியதுஎன்பதால்ஷிண்டேமுடிவுகளைப்பதிப்பிக்கத்தயங்கினார். ஹரப்பாதொடர்பானஎந்தஆய்வுமுடிவானாலும்தற்போதைமத்தியஅரசின்இந்துத்துவக்கருத்தைஎதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, வேதகாலமும்அப்போதையஇந்துமதமும்தான்இந்தியநாகரீகத்தின்துவக்கம்என்பதைத்தான்தற்போதையஅரசுவலியுறுத்தவிரும்புகிறது. ஆனால், ஹரப்பாநாகரீகம்தொடர்பானஆய்வில்ஈடுபட்டிருப்பவர்களுக்குஇதுசிக்கலானது. 1924ல்சிந்துச்சமவெளிநாகரீகத்தின்சிதைவுகளைகாலனீயஅகழ்வாராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்தபோதே, அதுவேதகாலத்திற்குமுந்தையநாகரீகம்என்பதுதெளிவாகிவிட்டது. அந்தநாகரீகம்வடமேற்குப்பகுதியிலிருந்துவந்தஆரியர்களால்அழிக்கப்பட்டதுஎன்றகருதுகோளைஅவர்கள்முன்வைத்தனர். பின்வந்தஆராய்ச்சியாளர்கள்ஆரியர்களின்ஆக்கிரமிப்புஎன்றகருத்தைஏற்கவில்லை. ஆனால், சிந்துச்சமவெளிநாகரீகம்வேதகாலத்திற்குமுந்தையதுஎன்றகருத்தைஏற்றனர்.
இந்துத்துவதேசியவாதிகளைப்பொறுத்தவரைஇந்தஆரியஆக்கிரமிப்புகருத்தாக்கம்பெரும்எரிச்சலையும்பதற்றத்தையும்ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப்பொறுத்தவரைசிந்துச்சமவெளிநாகரீகம்திராவிடநாகரீகம்எனக்கருதினர். ஆனால், உண்மையில்சிந்துச்சமவெளியில்வசித்தவர்கள்யார்என்பதுமர்மமாகவேஇருந்தது. ராக்கிகடியில்கிடைத்திருக்கும் 4500 ஆண்டுபழமையானஇந்தஎலும்புக்கூடுஇதில்சிலகேள்விகளுக்குப்பதிலளிக்கக்கூடும். இந்தஎலும்புக்கூட்டுக்கு ‘I4411’ எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. ராகிகடிதான்இந்தியாவின்மிகப்பெரியஹரப்பா–சிந்துச்சமவெளிநாகரீகபகுதி. பாகிஸ்தானின்சிந்துபகுதியில் 1920-களில்அகழ்வாய்வுசெய்யப்பட்டமொஹெஞ்ஜோ – தாரோவைவிடமிகப்பெரியஆகழ்வாய்வுத்தளம்இது.
1960-களில்இருந்தேஇங்கேஆய்வுமேற்கொள்ளப்பட்டுவருகிறது. கிறிஸ்துபிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்குமுன்பிருந்தேஇங்குஒருநகர்ப்புறநாகரீகம்இருந்திருக்கிறதுஎன்பதுபலமுறைநிரூபிக்கப்பட்டுவிட்டது. இன்றைக்கு 4 ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பேஇந்தப்பகுதியில்உயர்வானஒருஹரப்பாநாகரீகம்இருந்திருக்கிறதுஎன்பதற்குப்போதுமானசான்றுகள்கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பாகமிகப்பெரியநகரமாகஇருந்து, பிறகுமர்மமானமுறையில்வீழ்ந்தஇந்தநகரம்தான்இந்தியாவின்முதல்நகர்ப்புறநாகரீகமாகஇருக்கக்கூடும். இந்துத்துவவாதிகள்இந்தியவரலாற்றைமாற்றிஎழுதுவதில்மிகத்தீவிரமாகஇருக்கும்இந்தக்காலத்தில், அறிவியல்அதற்குஎதிர்த்திசையில்சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, ராகிகடிஎலும்புக்கூட்டின்மரபணுவில்மரபணுக்குறியீடு ‘R1a1’ இல்லை. இந்த ‘R1a1’ குறியீடுதான்ஆரியமரபணுக்குறியீடுஎனகுறிக்கப்படுகிறது. இந்தமரபணுவானது 4000 ஆண்டுகளுக்குமுன்பாககருங்கடலுக்கும்காஸ்பியன்கடலுக்கும்இடைப்பட்டஸ்டெப்பிபுல்வெளிபகுதியிலிருந்துவெண்கலகாலத்தில்இந்தியாவுக்குவந்தமக்களிடம்இருக்கும்மரபணுக்குறியீடுஇதுதான். இந்தமரபணுக்குறியீடுவடஇந்தியர்களிடமும்வடக்குஐரோப்பியர்களிடமும்வலுவாகக்காணப்படுகிறது.
இன்றைக்கு
4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா
நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள்
கிடைத்திருக்கின்றன. பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான்
இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.
சிந்துச்சமவெளிப்பகுதியில்கிடைத்தஒரேஎலும்புக்கூட்டில்செய்யப்பட்டஇந்தஆய்வில், ‘R1a1’ மரபணுகுறியீடுஇல்லைஎன்பதைவைத்துசிலமுடிவுகளைஎட்டலாம். அதாவதுசிந்துச்சமவெளிநாகரீகம்என்பதுவேதகாலநாகரீகத்திற்குமுந்தையது. ஆரம்பகாலசமஸ்கிருதத்தைப்பேசியவர்களின்மரபணுவிலிருந்துமாறுபட்டது. இந்தஆரம்பகாலசமஸ்கிருதத்தைப்பேசியவர்களின்மரபணுகுறியீடுகள்தற்போதையவடஇந்தியர்களிடம்பொதுவாகக்காணப்படுகின்றன. அந்தகாலகட்டத்தில், மத்தியஆசியாவிலிருந்துபெரும்எண்ணிக்கையில்வந்தவர்கள், தெற்காசியாவின்மரபணுசித்திரத்தைமாற்றிஅமைத்தார்கள்என்றாலும்பழங்காலராகிகடியில்வசித்தவர்கள், இந்தமத்தியஆசியாவைச்சேர்ந்தவர்களோடுஎந்தத்தொடர்பும்இன்றிஇருந்திருக்கக்கூடும். அதாவதுசிந்துவெளிமக்களின்மூதாதையர்களுக்கும்இந்தமத்தியஆசியமனிதர்களுக்கும்எந்ததொடர்பும்இல்லை. ஆனால், இதைப்படித்துக்கொண்டிருக்கும்உங்களதுமரபணுவில் 17.5 சதவீதம்ஸ்டெப்பிபுல்வெளியிலிருந்துவந்தவர்களுடையது. நாம்பொதுவாகஇஸ்லாமிய, ஐரோப்பியநாட்டவர்கள்இங்கேவந்துஆதிக்கம்செலுத்தினார்கள், நம்கலாச்சாரத்தைஅழித்தார்கள்என்றுஅரசியல்முழக்கங்களைஎழுப்பபவர்கள்இங்கேஉண்டு. ஆனால், அவர்களதுமரபணுப்பதிவுகளைவிட, ஸ்டெப்பிபுல்வெளிக்காரர்களின்மரபணுப்பதிவுநம்மிடம்அதிகம்உள்ளது. சரி, இந்த 4500 ஆண்டுபழமையான ‘I 4411’ என்பவர்யார்? “இந்தமனிதருக்கும்தென்னிந்தியாவின்பழங்குடியினமக்களுக்கும்கூடுதல்தொடர்பிருக்கிறது” என்கிறார்மரபணுஆராய்ச்சியாளர்ராய். அதாவது, தற்போதையநீலகிரிமாவட்டத்தில்வசிக்கும்இருளர்களின்மரபணுவோடுஇதுகூடுதலாகஒத்துப்போகிறது. இந்தமனிதர்கள்ஆரம்பகாலதிராவிடமொழியைப்பேசியிருக்கக்கூடும்!! இந்தஆய்வுமுடிவுகள்வேறுசிலஅதிரவைக்கும்உண்மைகளையும்சொல்கின்றன. அவைஎன்ன? பகுதி – 2
சிந்துச் சமவெளி வரலாற்றை மாற்றி எழுத
இந்துத்துவ சக்திகள் செய்த முயற்சி
இந்த ஆய்வுகளில் இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது. அதாவது,
இந்தியாவில் ஏற்கனவே வசித்தவர்களின் மரபணுக்களுடன் இந்தியத் துணைக்
கண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களின் கலப்பும்
ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து வந்த இவர்கள் இரானிய விவசாயிகள் என்று
அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு முன்பாக பழங்கால டி.என்.ஏ.க்கள் பரிசோதனை செய்யப்பட்டபோதும் இது
உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் புதிய யுத்திகள்
அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மேற்காசியாவுடன் ஏற்பட்ட தொடர்பாலேயே
சாத்தியமாயின என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கும் இது வலுச்சேர்க்கிறது.
சிந்துச் சமவெளி நாகரீகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில், யுரேசிய
ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளிலிருந்து பெரும் தொகையான மக்கள் திரள்
இந்தியாவில் குடியேறியது என்ற முந்தைய ஆய்வு முடிவை அஸ்திவாரமாக வைத்தே
ராகிகடி ஆய்வு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து
தெற்காசியாவுக்கு மட்டுமல்ல வட ஐரோப்பாவுக்கும் மக்கள்
புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வகையான மக்கள் தொகை கலப்பே ஐரோப்பிய
மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் இடையிலான உறவை விளக்கப் போதுமானது. ஹரப்பாவில்
நிலவிவந்த திராவிட நாகரீகம் முடிவை எட்டிய காலத்தில் ஸ்டெப்பி
புல்வெளியிலிருந்து வேதகால மக்கள் குதிரைகளில் வந்தேறினர் என
பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு
ஆச்சரியமளிக்காது.
ராகிகடி ஆய்வுகள் முடிந்த பிறகு, அந்த ஆய்வில் என்ன கிடைத்திருக்கிறது
என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி வழக்கம்போல
பொய்க் கதைகளும் பரப்பப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வின்
மரபணு ஆராய்ச்சியில் பங்கேற்ற ராய் என்பவரைப் பேட்டியெடுத்ததாகவும் அவர்,
ராகிகடி மரபணுவுக்கும் வடஇந்திய பிராமணர்களின் மரபணுவுக்கும் தொடர்பு
இருப்பதாகக் கூறியதாகவும் ஒரு இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆக, இந்தோ
– யுரேப்பியன் மொழிக் குடும்பம் என்பது இந்தியாவிலிருந்து தோன்றியது
என்றது அந்த நாளிதழ். ஆனால், அப்படி ஏதும் இல்லை. அது ஒரு பொய்ச் செய்தி.
ராகிகடியிலிருந்து கிடைத்த ஜீன்களில் R1a1 – அதாவது ஆரிய மரபணு இல்லை
என்பதுதான் இந்த ஒட்டுமொத்த ஆய்வும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம். ஆனால்,
இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை,
அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த
முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.
இந்துத்துவவாதிகள் சமீப காலமாக, சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேதகால
நாகரீகம் என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். 2014ல் பா.ஜ.க.
அரசு பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகு, இந்த இந்துத்துவ வரலாற்று
முயற்சிகளுக்கு ஆதரவும் பணமும் கிடைப்பதும் எளிதாகியிருக்கிறது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா இந்திய வரலாற்றை திருத்தி
எழுதும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 2017ஆம் ஆண்டு
ஜனவரி மாதம் வரலாற்றுக் கமிட்டிக் கூட்டம் ஒன்றை ஆர்க்கியாலஜிகல் சர்வே
ஆஃப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் கூட்டினார். இந்தக்
கமிட்டியின் தலைவர் கே.என். தீக்ஷித். அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின்
நோக்கம், இந்தியாவின் பழங்கால வரலாற்றின் சில பகுதிகளைத் திருத்தி எழுத
ஏதுவாக ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்வதுதான்.
அந்தக் கூட்டத்தின் குறிப்புகளில் பின்வரும் வாக்கியங்கள்
இடம்பெற்றிருக்கின்றன: “அகழாய்வு முடிவுகள், மரபணு ஆய்வுகள் போன்றவற்றை
பயன்படுத்தி தற்கால இந்துக்கள் என்பவர்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு
முன்பாக இந்தியாவில் வாழ்ந்தவர்களிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க
வேண்டும். பழங்கால இந்து கதைகள் உண்மையானவை, அவை வெறும் தொன்மங்கள் அல்ல
என்று கூற வேண்டும்”.
ஆனால், உண்மையான அறிவியல் ஆராய்ச்சி இதற்கு எதிரான திசையிலேயே ஆய்வுகளை
எடுத்துச் சென்றது. இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவது என்பது, அவ்வளவு
எளிதான காரியமாக இல்லை.
ஹார்வர்டில் மக்கள் தொகை மரபணு ஆய்வாளரான டேவிட் ரெய்க் Who We Are and
How We Got Here என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் வட
மேற்குப் பகுதியிலிருந்து யுரேசியர்கள் குடியேறினார்கள் என்பதைச் சொல்வதே
எவ்வளவு சிக்கலான காரியமாக இருந்தது என்று வியக்கிறார்.
இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது
இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்று கூறப்படும்
நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது.
பிறகு ஒரு வழியாக, டெக்னிகலான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப்
பிரச்சனை தீர்க்கப்பட்டதாம். அதாவது தென்னிந்தியர்களைக் குறிக்க ‘Ancestral
South Indian’ (ASI) என்ற வார்த்தையும் வட இந்தியர்களைக் குறிக்க
‘Ancestral North Indian’ (ANI) வார்த்தையும் பயன்படுத்தப்பட்டது. பிறகு
ஏஎன்ஐயிடம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களின்
மரபணுக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டது. ஏ.என்.ஐ.
என்பதற்குப் பதிலாக பழங்கால வட இந்தியர்கள் என்ற வார்த்தையைப்
பயன்படுத்தியிருந்தால் சிக்கலாகியிருக்கும்.
இதே பிரச்சனை தற்போதைய ஆய்வுக்கும் வந்தது. ரெய்க், அவரது அணியினர்,
ராகிகடியில் ஆய்வுசெய்தவர்கள் இணைந்து The Genomic Formation of South and
Central Asia-இல் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிப்பித்தனர். இந்தக் கட்டுரையில்
தெற்காசியாவிற்கு வெளியிலிருந்து புலம்பெயர்ந்து மக்கள் வந்தார்கள் என்ற
வாக்கியம் வரக்கூடாது என ராகிகடியின் ஆய்வாளர்களில் ஒருவரான ஷிண்டே
ரெய்க்கிடம் கூறினார். பதிலாக, இந்த இரு மக்கள் தொகைக்கும் (வட இந்தியர் –
யுரேசியர்) இடையில் கலப்பு இருந்தது என்று வேண்டுமானால் கூறலாம் என்றார்.
ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே தேவையில்லாத கவனம் இந்த
ஆய்வுக்குக் கிடைப்பது இதன் மூலம் தவிர்க்கப்பட்டது. அப்படி மூடுமந்திரமாக
இருந்ததால்தான், ஹரப்பா நாகரீகம் அழிந்த பிறகு, மத்திய வெண்கல
காலத்திலிருந்து பிற்கால வெண்கல காலம் வரையில் ஸ்டெப்பி புல்வெளிகளைச்
சேர்ந்தவர்கள் இந்தியாவினுள் வந்தார்கள் என்ற முடிவை தற்போது சொல்ல
முடிந்திருக்கிறது.
ஆனால், இந்த ஆய்வு முடிவு ஏன் இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டது என்பது
மர்மமாகவே இருக்கிறது. தாங்கள் சேகரித்த ஒரு மாதிரி மாசுபட்டதால் இந்தத்
தாமதம் என அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக
அசௌகர்யமான உண்மைகளை இந்த ஆய்வு முடிவு சொல்லும் என்பதாலேயே தாமதம் ஆனதாக
ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஹார்வர்ட் அணியினர் பொறுமையிழந்து தங்கள் pre-printஐ
வெளியிட்டுவிட்டனர். இதற்குப் பிறகு, ஷிண்டே தன் ஆய்வின் முடிவுகளை சற்று
அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ராகிகடியில் இருந்தவர்கள் உள்ளூர்காரர்களைப்
போலத்தான் இருந்திருப்பார்கள். என்ன, தென்னிந்திய பழங்குடியின மக்களோடு
சற்று தொடர்பிருந்திருக்கும் என்று பேச ஆரம்பித்தார்.
ஆனால், ஷிண்டே மட்டுமே இந்த முடிவுக்கு வர முடியுமா? (தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக