சனி, 15 செப்டம்பர், 2018

நம்பி நாராயணன் .. அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் இருந்தவருக்கு நேர்ந்த கொடுமை

:
Diwakar Singh : அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் விஞ்ஞானியாக இருந்தவரின் குடும்பம் தனக்கு தானே தண்டனை வழங்கிகொண்டு, கூனி குறுகிப் போய் வழக்கிலிருந்து விடுபடும்வரை தன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த மிக கொடுமையான நாட்கள் உங்களுக்கு தெரியுமா?
ஆம் நம் இந்திய தேசத்தில்தான் இந்த கொடுமை நடந்தது,,
நாம் பெரிதும் மதிக்கிற "ISRO " வின்தலைமை விஞ்ஞானியாக இருந்தவரும் அப்துல்காலமுக்கு அடுத்த இடத்தில் இருந்து பணியாற்றிய விஞ்ஞானி
திரு நம்பி நாரயணணுக்குதான் இந்த கதி,
1994 ராக்கெட் தொழில் நுட்ப ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றார் என்பதுதான் குற்றாச்சாட்டு,
அந்த வழக்கில் தனக்குதானே, தன் குடும்பத்துக்கே தானே தனிமை சிறை விதித்துத்கொண்டு, வழக்கில் வாதாடி வெற்றி பெற்று, தன் மீதான வழக்கு பொய்யென நிறுபித்து வெளிவரும்வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை ,
வழக்கில் நிராதிபதியாகி வெளியே வந்தவுடன் நடந்த சம்பவங்கள்தான் உச்சகட்டம்,

ஆம், பகிரங்கமாக பொது வெளியில் மன்னிப்பு கேட்கப்பட்டது,
நம்பி நாரயாணணுக்கு தண்டனை பெற்று தந்தது தவறு என மன்னிப்பு கேட்டது யார் தெரியுமா?
கேரளாவின் அப்போதைய முதல்வரும்,
அதற்கு முன்பு ஆண்ட முதல்வரும் இருவரும் சேர்ந்து திருவனந்தபுரம் வீதீயில் மேடைபோட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டனர்,
ஏன் தெரியுமா?
அந்த வழக்கு இருதனிப்பட்ட நபர்களின் பழி வாங்கும் நடவடிக்கை என்பது தெரிந்து போனதால்,
இவ்வழக்கு தொடுக்கப்பட்டதற்கு காரணம் ,,
கேரளா மாநிலத்தில் விற்பனையாகும் இப்போது பிரபலமான ஒரு பத்திரிக்கையும், அப்பத்திரிக்கை அதிபரும்,
கேரளா முன்னாள் மிகப் பெரும் அதிகாரியும் இதில் சம்மந்தப்பட்டு,
திட்டமிட்டு ஜோடித்த வழக்கு என்பதால்,
கேரளா மாநிலத்துக்கே அசிங்கம் என்பதாலும் பகிரங்கமாக மேடை போட்டு ,
முன்னாள் அந்நாள் முதல்வர்கள் ,
நம்பி நாரயணண் குடும்பத்தை மேடையில் வைத்து பகிரங்க மன்னிப்பு கேட்டனர்,
(நம்பி நாரயணண் சிறுபதவியில் இருந்தபோது, அப்போது ஊடகத்தில் பதவியில் இருந்தவரும், பின்னாளில் கேரளாவின் மிகப் பெரும் பத்திரிக்கையாக உருவெடுத்த பத்திரிக்கையின் அதிபர் ஆனவரும் ,,
அந்த பத்திரிக்கை அதிபரின் பால்ய நண்பரான சாதரண காவல்துறை பணியில் இருந்து, பின்னாளில் கேரளா போலீஸ் மிகப்பெரும் பதவி உயர்வு பெற்றவரும் ஜோடித்த வழக்கு இது,
ஏதோ ஒரு பழைய கால பகையை தீர்க்க,நம்பி நாரயணண் மீது
தன்னுடைய காவல்துறையை வைத்து வழக்கு தொடுக்க,
காவல்துறை நண்பரின் பத்திரிக்கை அதிபர் தன் ஊடகத்தில்,,
"பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியம் விற்பனை " என அலற,
இதைப் பார்த்த மற்ற ஊடகங்களும் அவர்களும் தன்பங்கிற்கு கதை எழுத, பொதுமக்கள் இதையே நம்பிவிட, கூணிக் கூறுகி நிற்கதியாய் குற்றவாளி கூண்டில் நின்றார்
விஞ்ஞானி நம்பி நாரயணண்,, )
வழக்கு தொடுத்த நாள் முதல் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தது மட்டுமல்ல,
வழக்கில் வெற்றி பெற்று நிராதிபதியானதும், தன் மீதான வழக்கிற்கு மான நஷ்ட வழக்கும் தொடர்ந்திருந்தார்,
அந்த மான நஷ்ட வழக்கில் இன்றுதீர்ப்புவந்திருக்கிறது,
50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு தொகை வழங்க சொல்லி உச்ச நீதீமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது,
நம் தேசத்தில் பத்திரிக்கைகளும்,, ஊடகங்களும், காவல்துறையும், அதிகார வர்கமும் நினைத்தால் யாரையும் குற்றவாளியக்க முடியும் என்பதற்கு இவ்வழக்கே சாட்சி,
ஆனால் பிறிதொரு நாளில் உண்மை வென்றே தீரும்,
அப்துல் காலமின் அடுத்த இடத்தில் இருந்த விஞ்ஞானி நம்பி நாரயணணுக்கே இந்த கதி என்றால்,
சாதரணணுக்கு,!!😥😥
(திறமையான இவ்விஞ்ஞானியால் நாட்டுக்கு ஏற்பட்ட விஞ்ஞான இழப்பு எத்தனை, அதற்கெல்லாம் யார் பதில் சொல்வார், )
இதே போன்ற அதிகார வர்க்க, ஊடக, பத்திரிக்கைகளின், 2G மாய வலை பின்னளில் இருந்து மீண்டு வந்த ஆ ராசா போன்றோர்களை நினைத்தால் ஆனந்தக் கண்ணீர் வருகிறது

கருத்துகள் இல்லை: