திங்கள், 17 செப்டம்பர், 2018

கழிவு நீர் சுத்திகரிப்பு ..5 தொழிலாளர்கள் மரணம் .. டெல்லியில் தொடரும் அக்கிரமம்

tamil.indianexpress.com
கழிவு நீர் தொட்டிகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழப்பது படிப்பவர்களுக்கு ஒரு செய்தியாக்வே கடந்து விடும்.
ஆனால்  அதை அனுபவிப்பர்களுக்கு தான் அதன் வலி புரியும்.   காலை  பள்ளி செல்லும் போது டாட்டா காட்டிய தந்தை , மாலை வீடு திரும்பும் போது தந்தை இறந்து விட்டார் என்ற செய்தி எப்படி வாட்டி வதைக்கும் என்ற  உணர்வு இந்த புகைப்படம் மூலம் தெரிந்து விடும்.
கடந்த வெள்ளிக்கிழமை  டெல்லியில் மோதிநகர் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீரை  சுத்திகரிக்கும் வேலையில் 5 தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.   சுமார் 30 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்கை  சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போது அந்த 5  தொழிலாளர்களும் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  மரணம் அடைந்த ஐவரும் 28 முதல் 30 வயது உடையவர்கள்.
இந்த ஐவரும் மரணம் அடைந்ததிற்கு அவர்களிடம் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததே என்று  காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஐவரின் உடல்களும்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதில் மரணம் அடைந்த ஒருவரின்  7 வயது சிறுவன், தனது தந்தையின் உடலை பார்த்து அழும் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்ணிலும் கண்ணீரை வர வைத்துள்ளது.  வெறும் சடலாம கிடக்கும் தனது தந்தையின் உடல்  விஷ வாயு தாக்கிய கொடூரமாக மாறி இருப்பதை அறியாத அந்த சிறுவன், அவரின் முகத்தில் மூடப்பட்டு இருக்கும் துணியை எடுத்து பார்த்து அப்பா.. அப்பா என்று அழுகிறான்.
இந்த காட்சிகள் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் உறைய வைத்துள்ளது.  மேலும் இந்த புகைப்படத்தை பலரும்  சமூகவலைத்தளங்களில் கண்ணீருடன், கோபத்துடனும் பதிவிட்டு வருகின்றன. இந்த ஏழை சிறுவனின் கண்ணீருக்கு பதில் யார் கூற முடியும்?

கருத்துகள் இல்லை: