ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

போலி வானிலை தொலைக்காட்சி செய்தி... புயல் நாடகம்..

cauverynews.tv :அமெரிக்காவின் கரோலினாவை ஃபிளாரன்ஸ் புயல் தாக்கிய போது, வானிலை தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசித்த மைக் செய்டல் என்ற செய்தியாளர் புயலால் அசைக்கப்படுவது போல உடலை அசைத்தபடி வாசித்தார்.ஆனால் அவருக்குப் பின்னால் இரண்டு பேர் இயல்பாக நடந்து சென்றதால் அது நாடகம் என அம்பலமானது. எனினும் ,வானிலை செய்தி வாசித்தவர் ஈரமான புல்தரையில் நின்றிருந்ததால் அவரால் நிலை கொள்ள முடியவில்லை என்று வானிலை தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.இந்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது . சமூக ஊடகங்களில் இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

கருத்துகள் இல்லை: