ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் ரவுடி எச் ராஜாவின் அடாவடி ரகளை .. விடியோ

By Shyamsundar  ONEINDIA TAMIL சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசுக்கும் நீதிமன்றத்திற்கு எதிராக கொச்சையாக பேசிய எச்.ராஜா, போகிற போக்கில் தமிழக டிஜிபியை குறித்து தவறாக பேசியுள்ளார். 
அவரது இந்த பேச்சு காரணமாக அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. 
நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். 
போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். முக்கியமாக டிஜிபியையும் திட்டினார். மோசமான பேச்சு எச்.ராஜா பேசியது மொத்தமும் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் அவர் நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையில் பேசியுள்ளார். 
போலீஸ் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார்.
டிஜிபிக்கு எதிராக டிஜிபிக்கு எதிராக இந்த வீடியோவில் எச்.ராஜா, போலீசுக்கு வெட்கமாக இல்லையா, உங்க டிஜிபி வீட்டுல ரெய்டு நடந்த அப்பவே நீங்க எல்லாம் யூனிபார்மை கழட்டிட்டு வீட்டுக்கு போய் இருக்கனும். 
இன்னைக்கு புழல் சிறையில தீவிரவாதிகள் கலர் டீவி வச்சு இருக்காங்க. உங்களுக்கு எல்லாம் எல்லாம் வெட்கமா இல்லையா, என்றுமீண்டும் மீண்டும் டிஜிபி குறித்தும் போலீஸ் குறித்தும் தவறாக பேசியுள்ளார். 
ரெய்டை சுட்டிக்காட்டி ரெய்டை சுட்டிக்காட்டி தமிழகத்தில் கடந்த இரண்டு வாரம் முன்பு 30 இடங்களில் ரெய்டு நடந்தது. 
அதில் முதல்முறையாக தமிழகத்தில் டிஜிபி வீட்டிலும் ரெய்டு நடந்தது. அதேபோல் டிஜிபி அலுவலகத்திலும் முதல்முறை ரெய்டு நடந்தது. இதைதான் எச்.ராஜா சுட்டிக்காட்டியுள்ளார். 
என்ன தைரியம் என்ன தைரியம் தமிழக டிஜிபிக்கு எதிராக, தமிழக போலீஸ் ஒருவர் முன்னிலையிலேயே எச்.ராஜா இப்படி பேசியுள்ளார். 
அதோடு யூனிபார்மை கழட்டி வீசுங்கள் என்றெல்லாம் மிகவும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். ஆனால் இதை எல்லாம் போலீஸ் எந்த சலனமும் இல்லாமல் அங்கேயே நின்று கேட்டுக்கொண்டுள்ளது.
 யாருமே பேசியதில்லை யாருமே பேசியதில்லை தமிழகத்தில் இதற்கு முன்பு சில அரசியல்வாதிகள் போலீசுக்கு எதிராக வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் இந்த அளவிற்கு யாரும் கொச்சையாக பேசியதில்லை. கோரிக்கையாக மட்டுமே வைத்துள்ளனர். 
ஆனால் எச்.ராஜா போலீசை தவறாக பேசியது மட்டுமில்லாமல் மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசியுள்ளார். இதனால் போலீஸ் இவர் மீது நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: