
திருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தற்கொலை செய்தபிறகு நடிகை நிலானி கடும் மனவேதனையில் இருந்தார். குன்றத்தூர் அபிராமியை ஒப்பிட்டு நிலானி மீது சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளியாகின. இதனால், அவர், மீடியா முன், கண்ணீர்மல்க காந்தி லலித்குமார் குறித்த தகவல்களைக் கூறினார். இந்தச் சூழ்நிலையில்தான் வீட்டிலிருந்த கொசு மருந்தைக் குடித்து நடிகை நிலானி தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
நிலானி எப்படியிருக்கிறார் என்று மருத்துவமனையில் விசாரித்தோம். நிலானி குடித்த கொசு மருந்தின் அளவு குறைவு என்பதால் அவரின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கொசு மருந்தை வெளியேற்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்கின்றனர் மருத்துவமனையில் உள்ளவர்கள். மருத்துவமனையில் நிலானியின் இரண்டு குழந்தைகள் அவரின் அருகிலேயே இருந்து கவனித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களும் நிலானிக்கு தேவையான உதவிகளைச் செய்திருக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக