இதனைத் தொடர்ந்து தனது அடுத்த ட்விட்டரை
ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் கமல். அதில் அவர் ‘திரு நாகேஷ் என்
குருமார்களில் ஒருவர். திருமதி ராஜ்குமார், ராஜ்குமார் அண்ணா, திருமதி
சரோஜாதேவி ஆகியோர் என் நண்பர்கள். திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ்
எனக்கு உரியவர்கள். துணைவேந்தர் விஷயத்தில் இப்படி மத்திய மாநில அரசுகள்
ஒன்றை கேட்டால் இன்னொன்றை தருவது நகைப்புக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர்
தேவை.’ என்றூ பதிவிட்டிருந்தார். இவர்கள் எல்லாம் கன்னடர்கள் என்று எதற்கு
கமல் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டு அதில் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிட
வேண்டிய அவசியம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். கமல்
நேர்மறையாக சொன்னாலும் எதிர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் போக்குத் தான்
கண்டனத்துக்குரியது என்கின்றனர் கமல் ரசிகர்கள்.
ஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட்
சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தை விரைவில் கமலே வெளியிடுவார்
என்கிறது கமல் தரப்பு
வெள்ளி, 6 ஏப்ரல், 2018
ரஜினியை கன்னடர் என சீண்டும் கமல் .. கமலும் கன்னடர்தான் .. ஹசன் மாவட்டம் கர்நாடகம் ..Hassan District Karnataka
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக