வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பக்கவாத நோயிலிருந்து விடுபட முட்டைகோஸ், காலிஃப்ளவர்!

பக்கவாத நோயிலிருந்து விடுபட முட்டைகோஸ், காலிஃப்ளவர்!மின்னம்பலம்:  வயது முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட சத்தான காய்கறிகளைச் சாப்பிட்டுவருவதால், அவர்களுக்குப் பக்கவாதம் நோய் தாக்குவது குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பக்கவாதம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். சுமார் 70 வயதான 954 பெண்களிடம் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் வெளிவந்த முடிவுகளின் விவரம், “வயதில் முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்களைச் சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள்.

தினமும் மூன்றுவேளை உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைகோஸ் கீரை வகைகளைச் சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன” என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குறித்து, அமெரிக்காவில் உள்ள இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், “இந்த ஆய்வின் மூலம் இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய, சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெரியவந்தது. இதனால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் கணிசமாகக் குறைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: