

இந்தத் தகவல் உடனடியாக ஸ்டாலின் வீட்டின் அருகேயுள்ள காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஸ்டாலின் வீடிருக்கும் சித்தரஞ்சன் சாலை பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. மேலும் ஸ்டாலின் இல்லத்தில் சோதனை நடத்தியபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோபாலபுரத்தில் இல்லத்தில் சோதனை நடத்தியபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் மிரட்டல் பொய்யானது என்று தெரியவந்தது.
மிரட்டல் வந்த எண்ணினை சோதனை செய்தபோது அந்த எண் காஞ்சிபுரம் பகுதியைக் காட்டியது. இதனையடுத்து மர்ம நபரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஸ்டாலின் இல்லம், கோபாலபுரம் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக