வியாழன், 5 ஏப்ரல், 2018

50 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் டேட்டாக்களை காணவில்லை ... காசுக்கு வித்திருப்பாய்ங்க..

மின்னம்பலம்: ஒய்வு பெற்ற ராணுவத்தினர் 50 லட்சம் பேர் குறித்த தகவல்கள் தனியார்
நிறுவனத்தினால் திருடப்பட்டதா என்று மத்தியஅரசின் பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் 23ம் தேதியன்று ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட அமைப்பிடமிருந்து தனியார் நிறுவனம் ஒன்று 50 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குறித்த தகவல்களை பெற்று விட்டு அவற்றை திரும்பித்தரவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி லோகேஷ் கே.பாத்ரா என்பவர் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையிடம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குறித்து தகவல் கேட்டிருந்தார். அதற்கு பின்னா் அவருக்கு தகவல் அளித்தபோது அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது.

ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் அனைத்து தரப்பினா் குறித்த தகவல்களையும் ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் என்ற அமைப்பே வைத்துள்ளது. இந்த அமைப்பிடம் உள்ள ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2004ல் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் பின்னா் 2010ல் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்கு பெறப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திரும்பித் தந்ததா என்பது இதுவரை தெரியவி்ல்லை என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தருமாறு ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத்திட்ட அமைப்பிடம் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: