மின்னம்பலம் : விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்லாத நிலையில், “விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென அழைப்பு விடுத்துள்ளாரே?
நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22-ந் தேதி கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த முறை விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனால் கடந்த ஆண்டு விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த முறை, எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை; இதனால் எடப்பாடி பழனிசாமியும் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இது பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நாம் கேட்ட போது, விஜய் பிறந்த நாள் பற்றி ஆலோசனை நடந்ததுதான், அப்போது, ‘ இந்த வருஷம் என்னுடைய பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்து சொல்லலையே, நாம் ஏன் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லனும்” என கேள்வியை எழுப்பினாராம் எடப்பாடி பழனிசாமி.
அதுமட்டும் இல்லை.. விஜய் பிறந்த நாளுக்கு “அண்ணன் நயினார் நாகேந்திரன் வாழ்த்து சொன்னாக.. அக்கா தமிழிசை வாழ்த்து சொன்னாக” என்ற ரேஞ்சுக்கு பெரிய பட்டியலே இருக்கிறதே..
Digital Thinnai Delhi in the background
யார் யார் விஜய்-க்கு வாழ்த்து சொன்னவர்களாம்?
பாஜகவின் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவின் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், பாஜகவுடன் நட்பாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்.
திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தேமுதிகவின் விஜயபிரபாகரனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் போட்ட ட்வீட்டில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என சொல்லிவிட்டார்.
இப்படி பதிவிட்டதற்கு காரணமே, தமக்கு வாழ்த்து சொன்னவர்களில் பெரும்பாலானோர் பாஜக, அதன் கூட்டணித் தலைவர்கள்தான் பாஜகவை எதிர்த்து அரசியல் பேசிக் கொண்டு அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிப்பதை விஜய் விரும்பவில்லையாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு வைண்ட் அப் செய்தது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக