செவ்வாய், 24 ஜூன், 2025

SWRD பண்டாரநாயக்கவின் இனவாத அரசியலுகே SJV செல்வநாயகம்தான் வழிகாட்டி

S J V Chelvanayakam - Alchetron, The ...

 Ganeshwaran Veerakathy : வித்தியோதய, வித்தியலங்கார பிரிவேனாக்களை கலாச்சாரப்பல்கலைக் கழகங்களாக மாற்றும் அரசாங்கத்தினுடைய திட்டத்தின்போதே,
 யாழ்ப்பணத்திலும் கலாச்சாரப் பல்கலைக் கழகம் ஒன்றுக்கான ஏற்பாடாகவே இந்துப்  பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்ற கோரிக்கை ஜீ.ஜீ யினால் வைக்கப்பட்டது..
தமிழ்ப் பல்கலைக்க்கழகம் என்பது கல்லச்சாரப்பல்கலைக்கழகம் ஆக முடியாது என்று தெரிந்திருந்தாலும் ”ஜி ஜி பொன்னம்பலம் எதை செய்தாலும் அதை தகர்த்து தவிடு பொடியாக்குவதையே தனது அரசியல் கொள்கையாக வரித்திருந்த செல்வநாயகமும் அவரது தமிழரசு கட்சியினரும் யாழ்ப்பாண பல்கலை கழக நிர்மாணத்திற்கு எதிராக திருகோணமலையில் தமிழ் பல்கலை கழகம் அமைக்கவேண்டும் .ஏனெனில் அதுதான் தமிழர் தலைநகரம் என்று உணர்ச்சி கூச்சல் எழுப்பினர் ”

 இதன் காரணமாக வித்தியோதய, வித்தியலங்கார பிரிவேனாக்கள் கலாச்சாரப்பல்கலைக் கழகங்களாக மாற்றம் பெற்றபோதே யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய பல்கலைக்கழகத்தை தொடங்க விடாமற் செய்த பெருமை தமிழரசுக் கட்சிக்கே உரியது..



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட பின்னரே  சில விசேட தேவைகளின் பொருட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில்  சில வகுப்புகள் ந்டாத்தப்பட்டன என்ற்தான் நான் அறிந்திருந்தேன்.

Rubasangary Veerasingam Gnanasangary யின் கிழே குறிப்பிட்ட கருத்திடலை என்னால் ஏற்க முடியாதுள்ளது .தயவுசெய்து இதுபற்றி  உரிய இடங்களில் விசாரித்து உண்மையான தகவல்களைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
யாழ்ப்பாணக் கல்லூரியில் பல்கலைக்கழகம் ஆரம்பிகப் பட்டிருப்பின் அது மிகப் பெரிய செய்தியாக பத்திரிகைகளில் வந்திருக்கும்.
(Rubasangary Veerasingam Gnanasangary --(Radha Mano ஏற்கனவே யாழ்ப்பாணக் கல்லூரியில் இயங்கிக் கொண்டிருந்த பல்கலைக் கழகத்தைதான் பரமேஸ்வராக் கல்லூரிக்கு இடம் மாற்றினார்கள். யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகம் விட்டுக் கொடுக்கவில்லை. நீண்டகால போராட்டத்தின் பின்னரே அரசு வெளியேறியது. So, ஆறு வருடங்கள் வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் பாதி இடத்தை ஆக்கிரமித்து அங்குதான் யாழ்ப்பாண பல்கலை கழகம் இயங்கியது.)

Ganeshwaran
செல்வநாயம் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்து--
பொன்னம்பலம்  இருக்கும்வரை தன்னால் தலைமைப்பதவிக்கு வரமுடியாது எனத் தெரிந்து கொண்ட செலவநாயகம் ,
தலமை தாங்குவதற்கு ஆரம்பித்த கட்சியே இலங்கைத் தமிழரசுக் கட்சி. கட்சியின் பதிவு செய்யப்பட்ட பதிவுப் பெயரும் அதுவே..
 இவரது செயற்பாட்டை அவதானித்த பண்டாரநாயக்கா,
 சேனநாயக்கா குடும்பம்  இருக்கும்வரை தன்னால் தலைமைப்பதவிக்கு வரமுடியாது எனத் தெரிந்து கொண்டார்.

இதன் விளைவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றம்..
பதவியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களிடையே பிரசாரப்படுத்தப்பட்ட “ பதவியேற்று இருபத்திநாலு மணித்தியாலத்திற்குள் தனிச்சிங்களச்சட்டம்- அரச்கரும மொழியாக சிங்களம் “.

இதுவே இனப்பிரச்சினை  தோற்றுவிக்கப்பட்ட்தற்கான காரணம்..
தலைமைப்பதவியைக் கைப்பற்றுவதற்கு இன்றுவரை இனவாதமும் மதவாதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன..
ஆயுதப் போராட்ட காலத்திலும் தலைமைத்துவப் போட்டிகாரணமாகவே  ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிந்தது.
 தோல்வி ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்து சரிபிழைகளைக் கண்டு எமது போக்குகளை சரிசெய்வதற்கு நாம் தயாராக இல்லை.

 தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை விட தலைமைப் பதவிக்கான முக்கியத்துவமே பெரிதாகத் தெரிகிறது.
நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதைக் கண்டு கொள்ளாத மக்கள் அவர்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவு கொடுக்கின்றனர்..

கருத்துகள் இல்லை: