வெள்ளி, 10 ஜூன், 2016

ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியின் விலை 1800 கோடி ரூபாய்...ரத்து...சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை

பிரபல எழுத்தாளர்'s photo.துரவாயல் திட்டமாவது.சேதுசமுத்திர திட்டமாவது மெட்ரோ ரயிலாவது மேம்பாலமாவது ....இதெல்லாம் வீண் வேலைகள்.. இதைவிட ஒரு ரூபாய்க்கு ரெண்டு உளுந்தவடைணு ஒரு திட்டம் கொண்டுவந்தால் மட்டும் போதும். அடுத்த முறையும் ஜெயலலிதா தான் முதல்வர்.திமுக கொண்டு வந்த சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டத்தை இதுவரை கிடப்பில் போட்டு வந்த அதிமுக அரசு நேற்று அத்திட்டத்தையே மொத்தமாக ரத்து செய்துள்ளதாக செய்தி. சென்னையின் அடிப்படை கட்டமைப்பை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் மிக முக்கிய திட்டம் இது. 2009 ஆம் ஆண்டு திமுக அரசால் அறிவிக்கப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்ட, 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள இத்திட்டம் 19 கி.மீ நீளமுள்ள பறக்கும் சாலை அமைப்பை கொண்டது. சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் புறநகர் சாலை வரை நாள் கணக்கில் நிற்கும் லாரிகளால் போக்குவரத்து நெரிசலிலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும் சிக்கித் தவிக்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனங்களுக்கு நேர விரையம். சென்னை துறைமுகத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு.  மதுரவாயிலாவது  சேதுசமுத்திரமாவது

மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் பல முறை இத்திட்டத்தை தொடங்க ஒத்துழைக்க சொல்லியும் எந்த பதிலையும் சொல்லாமல் புறக்கணித்து வந்துள்ளது தமிழக அரசு. சுமார் 500 கோடி ரூபாய் ஏற்கனவே இத்திட்டத்தில் செலவழிக்கப்பட்டு 120 ராட்சத கான்கிரீட் தூண்கள் எழுப்பப்பட்டு விட்டது.
புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம் வரிசையில் இந்த மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டமும் ஒழிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியின் விலை சுமார் 100-1800 கோடி ரூபாய்.  நெட்டிசன் பிரபல எழுத்தாளர்

கருத்துகள் இல்லை: