இதற்கு ராமநாதபுரம் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு கலந்து
கொண்டு பேசியதாவது:
கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக 180 நாட்
கள் பயணம் செய்கின்றன. ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து
பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், மத்திய தரைக்கடல், தென் கிழக்கு
ஆசியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் கடல் வழிப் பயணம்
மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை
சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும், ஆய்வுக்கும்
உரியது. உலகெங்கிலும் கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற 2 மரங்களைப்
பயன்படுத்த, தமி ழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறை
களில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழற்றி விடும்
படியான கட்டமைப்பைக் கொண்ட தொழி ல்நுட்பத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகவே
தமிழர்கள் பின்ப ற்றி வந்துள்ளனர்.
உலகெங்கிலும் தமிழ்ச் சொற்களில் 30,000 ஊர்ப் பெயர்கள் உள்ளன. பிரேசிலில்
உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற
பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற
பெயரில் அமைந்துள்ளன.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-ல்
இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில்
குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில்
நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன.
பழந்தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன என்றார்.
கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயிகள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டனர்.
tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக