திங்கள், 6 ஜூன், 2016

தே.மு.தி.க., த.மா.கா. மக்கள் நல கூட்டணியில் இருந்து விலக முடிவு?

ஜூன் 6: மக்கள் நல கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தேமுதிக விலக முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் நல கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 4 கட்சிகளும் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை தொடங்கினார்கள்.
2016 தேர்தலையொட்டி இந்த கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக உருவாக்கினார்கள்.  பின்னர் இந்த கூட்டணியில்  விஜயகாந்த் தலைமையிலான  தேமுதிகவையும், ஜி.கே.வாசன் தலைமையிலான  தமாகாவையும் இணைத்து 6 கட்சி கூட்டணியாக தேர்தலை சந்தித்தார்கள்.  வைக்கோ (நவீன சகுனி) கிட்ட போயி கேளுங்க  அடுத்த  ஐடியாவை தருவார்


நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில்  இந்த 6 கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் வெற்றிபெறவில்லை.  இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ தேர்தலில் போட்டியிடாமலேயே விலகி கொண்டார். அடுத்த நிலையில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டை பறிகொடுத்தார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நல கூட்டணியின் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தனர்.

இதன் விளைவாக தமாகா மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது.  தேர்தல் நேரத்தில் தங்கள் தலைமை எடுத்த முடிவால்தான் இத்தகைய படுதோல்வி ஏற்பட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டினார்கள்.
குறிப்பாக தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

திமுக தரப்பும், தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பதாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் விஜயகாந்த் கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணியில்  இணைந்து விட்டார்.  அதே போல தமாகாவும், அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்றே  பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தனர்.  ஆனால்  அவர்களும் திடீரென மக்கள் நல கூட்டணியில் இணைந்தனர்.  இதன் விளைவாக கட்சியின் மூத்த துணை தலைவர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் போன்ற முக்கிய பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேறும் நிலை உருவானது.

சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி மிகமோசமான தோல்வியை சந்தித்தது குறித்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும்
சட்டமன்ற வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.  இதில் பங்கேற்ற பலரும் தேர்தல் நேரத்தில் தலைமை எடுத்த முடிவு தவறானது. உடனடியாக  அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். தமாகா தரப்பிலும் கடந்த ஒரு வார காலமாக ஜி.கே.வாசன் தலைமையில் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் பங்கேற்ற கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் மக்கள் நல கூட்டணியில் இருந்து தமாகா உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

எனவே இம்மாதம் 11-ந் தேதி நடைபெறும்  தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை வாசன் வெளியிடுவார் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதே போல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்  என்று தெரிகிறmaalaisudar.com/

கருத்துகள் இல்லை: