வியாழன், 9 ஜூன், 2016

மதன் உயிரோடுதான் இருக்கிறார்... உபியில் தலைமறைவு? SRM பச்சமுத்துவின் பினாமி மதன்...

வாரணாசி: கங்கையில் மூழ்கப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டுத் தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் உ.பி. மாநிலம் பபத்பூர் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளார். 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லை கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தேடி வந்தனர். அவரைக் கொன்று எரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. மதன் விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியது இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்தது. மதன் தாயார், மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்
மதன் தமிழ்த் திரையுலகின் தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம்வந்த மதன் 2 வாரங்களுக்கு முன் கங்கையில் சமாதி அடையப் போவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு சென்றார். எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தருக்கும், தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே இதற்குக் காரணம் என்று கடிதத்தில் மதன் குறிப்பிட்டிருந்தார்.

Read more at: http://tamil.filmibeat.com/n

கருத்துகள் இல்லை: