திங்கள், 6 ஜூன், 2016

பொய்வழக்கு பதிவு செய்த போலீசுக்கு 6 லட்சம் அபராதம்.. விபத்தில் காப்பாற்ற சென்றவர் மீது காவல் ஆய்வாளர்...

காஞ்சிபுரத்தில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்றவர் மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு ரூ. 6 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 கடந்த 2013-ஆம் ஆண்டு காவலான் கேட் பகுதியில் இரு சக்கர வாகன விபத்து ஒன்று நிகழ்ந்தது. விபத்தில் சிக்கியவர்களை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெற்றிவேல் ராமன் காப்பாற்ற முயன்றார். இந்நிலையில் அப்போதைய காஞ்சிபுரம் காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், போலீஸார் காப்பாற்ற முயன்ற வெற்றிவேல் ராமன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 இது தொடர்பாக வெற்றிவேல் ராமன் தமிழக மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், இதில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர் சோமசுந்தரம் ஆகியோரின் ஊதியத்தில் இருந்து ரூ. 25 ஆயிரம் பிடித்தம் செய்து வெற்றிவேல் ராமனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். 
 மேலும் பாதிக்கப்பட்ட வெற்றிவேல் ராமனுக்கு காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ரூ. 6 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்துக்குள் நேரடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது தினமணி.காம்

கருத்துகள் இல்லை: