சனி, 11 ஜூன், 2016

பாரிவேந்தருக்கு ஜால்ரா அடிக்கும் இயக்குனர்கள் சங்கம்... வள்ளல் வழுக்கை வேந்தர் எங்க முதலாளி....

parivendharஎங்க முதலாளி, நல்ல முதலாளி; வள்ளல் குணம், நல்ல மனம் உள்ள முதலாளி” பார்வேந்தர் குறித்து பாட்டாகவே பாடிய இயக்குநர்கள் சங்கம்
கடந்த இரண்டு வாரங்களாக தமிழக ஊடகங்களில் பாரிவேந்தருக்கும் வேந்தர் மூவிஸ் மதனுக்குமான ‘சண்டைகள்’தான் தவிர்க்க முடியாத செய்தியாக இடம்பெறுகின்றன.  பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் எஸ் ஆர் எம் குழுமத் தலைவர் பச்சமுத்துக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி சில நாட்கள் இந்தச் செய்தியைத் தவிர்த்து வந்தது, பிறகு மதன் தரப்பிலான செய்திகளும் இடம் பெற ஆரம்பித்தன. மதனின் கடிதம், மருத்துவக் கல்லூரிக்காக லட்சக் கணக்கில் பணம் பெற்றதை உலகத்துக்குச் சொன்னது. பணம் கொடுத்து ‘ஏமாந்த’ பல மாணவர்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரிசை கட்டி நின்றார்கள். மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டுக்கு ரூ. 1 கோடி கேட்டதாகவும், மதனிடம் முன்பணமாக 10 லட்சம் தந்ததாகவும் புகார் அளித்தார் ஒரு மாணவர். விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.


பாரிவேந்தர் அறிக்கை விட்டு சமாளித்தாலும் ‘சேதாரத்தை’ குறைக்க முடியவில்லை. இந்த வேலையைச் செய்ய முன்வந்திருக்கிறது தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம்.
இதன் தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரிவேந்தர் வள்ளல் குணமும் நல்ல மனமும் கொண்டவர். ஏராளமான உதவிகளை திரைப்படத் துறையினருக்கு செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இருக்கிறவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறித்து இல்லாதவர்களுக்குத் தரும் ராபின்ஹுட்டாக  இயக்குநர்களின் கண்களுக்குப் பாரிவேந்தர் தெரிகிறார் போல! கல்வி ‘ராபின் ஹுட்’டின் கதை, சினிமாவாகவும் மாறலாம். யார் கண்டார்?   thetimestamil.com/


கருத்துகள் இல்லை: