சனி, 20 பிப்ரவரி, 2016

விஜயகாந்த் கூட்டணி முடிவை காஞ்சிபுரத்திலும் அறிவிக்கவில்லை.....ஏரியா விற்பனைன்னா லேசா?

மக்களே மக்களே கிங்கா இருக்கணுமா கின்மேக்கரா இருக்கனுமா ?  அப்புறம் முடிவை அறிவிக்கிறேன் என்றார் சேலம்: காஞ்சிபுரத்தில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் பங்கேற்க
நீண்ட இழுபறிக்கு பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, 41 தொகுதிகளை பெற்றார். அதில், 28 இடங்கள் கிடைத்தது. ஓரிரு மாதங்களில் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டு, அங்கிருந்து வெளியேறினார். தற்போது, 2016 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சியும் காத்திருக்கிறது. 'தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம்' என, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறினாலும், முடிவு எடுப்பதில் விஜயகாந்த் குழப்ப நிலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணியா, பா.ஜ.,வா என்ற நிலையில் தான் அவர் உள்ளார் என கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.மக்ஸிமம் தொகுதிகளை பறிக்ககணும் நன்னா குடிக்கணும்  பிரேமலதா சந்தோசமா இருக்கணும் சுதீஷ் டெல்லிக்கு போகணும் அப்புறம் சு.சாமிகிட்ட கேக்கணும் ...இதாங்க நம்ப கொள்கை 

கட்சியினரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தும் நிலையில், உறுதியான முடிவு எடுக்க முடியாமல், தலைமை தடுமாறுவதால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலின்போது, சேலத்தில் மக்கள் மீட்பு மாநாடு என்ற பெயரில், தே.மு.தி.க., மாநாட்டை நடத்தியது. அப்போதும், யாருடன் கூட்டணி என்ற சஸ்பென்ஸ் வைத்தவாறே விஜயகாந்த் இழுத்தடித்து வந்தார். மாநாட்டில் அறிவிப்பார் என்ற ஆவலோடு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சியினர் வந்து குவிந்தனர். மாநாட்டு முடிவில், கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்து கொள்கிறேன்' என, கூறி தொண்டர்களின் வாயை அடைத்து விட்டு கிளம்பி சென்றார். 


காஞ்சிபுரத்தில், தே.மு.தி.க., இன்று(20ம் தேதி) திருப்புமுனை மாநாட்டை நடத்துகிறது. கூட்டணி யாருடன் என்று விஜயகாந்த் அறிவிப்பார் என்ற நம்பிக்கை கட்சியினருக்கு இல்லை. எப்படியும், தேர்தல் நெருங்கும் தருவாயில் தான் கூட்டணியைப் பற்றி தெரிவிப்பார். மாநாட்டுக்கு போனாலும், எந்தவித பயனும் இருக்காது என தொண்டர்களிடையே கருத்து நிலவுகிறது. இதனால், பல மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரம் செல்ல தொண்டர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில், தே.மு.தி.க., தொண்டர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், தலைமைக்கு வேறு விதமான சிந்தனை இருப்பதாக தெரிகிறது. தி.மு.க.,வை தவிர்த்து மாற்று அணிக்கு போனால், கட்சியின் நிலை மோசமாகி விடும். மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பலர் கட்சி தாவி விடுவர். அவருடன் இருந்தபோதே, அ.தி.மு.க.,வுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் ஓடினர். கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், தற்போதைய நிலையில், தி.மு.க., கூட்டணி தான் நல்லது. மாநாட்டில் எங்கு அறிவிக்கப்போகிறார். சேலத்தைப் போன்று தான், காஞ்சிபுரத்திலும் நடக்கும் என்பது தான் எங்களுடைய கருத்து. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: