வியாழன், 18 பிப்ரவரி, 2016

தி மு க-வினருக்கு சமூக வலைதளப் பயிற்சி...

dmdk feb 1 7 stalinதிமுக பொருளாளர் மு..க.ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவில், ”சென்னையில் கழகத்தின் சார்பில்,”சமூக வலைதளப் பயிற்சி கருத்தரங்கம்” நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைதளங்களைச் சுமார் 200 மில்லியன் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் நிலை யில், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்ற வர்களில் பெரும்பாலானவர்கள் செல்போன் மற்றும் இணையத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இளைஞர்கள். வெளிப்படையான, ஆக்கபூர்வமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு சமூக வலை தளங்கள் பேருதவியாக இருக்கிறது என கருதுகிறேன்.  சமுகவளைதலங்களின் வலிமையை பற்றி இன்னும் பெரிய கட்சிகள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்றே தெரிகிறது


எனவே அரசியல் செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்காற்றும் வலை தளங்களின் தேவையை உணர்ந்து அதை முறைப்படி பயன்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் இந்த பயிற்சி கருத்தரங்கம் சமூக வலை தளங்களை திறமையாக கையாளுவதற்கு தேவையான போதிய பயிற்சியை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.
கழக தொண்டர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கழகத்தின் கொள்கை கள் மற்றும் சாதனைத் திட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்களில் பதிவு செய்து மக்களின் கவனத் திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன். அதே நேரத்தில், வதந்தி களையும், பீதிகளையும் பரபப்புவதற்கு சமூக வலை தளங்களை யாரும் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். வலிமையான தமிழகத்தை உருவாக் கிட ஆக்க பூர்வமான கருத்துக்களை பதிவு செய்து நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தி.மு.க.வில் செல்போன் மூலம் ‘மிஸ்டுகால்’ பிரசாரத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” 2016-ல் ஆட்சி மாற்றத்திற்கு தி.மு.க.வை ஆதரிப்பவர்களுடன் கருணாநிதி தொடர்பு கொள்ளும் “மிஸ்டு கால்” பிரசாரம், தி.மு.க. சார்பில் கருணாநிதி ‘72200 72200’ என்ற செல்போன் எண்ணை தொடங்கி உள்ளார். இந்த எண்ணுக்கு “மிஸ்டு கால்” கொடுத்து, திறமையாகவும், நேர்மையாகவும் செயல்படும் அரசு நிர்வாகத்தை அளிக்க விரும்பும் தி.மு.க.வின் முயற்சியில் ஒவ்வொருவரும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுத்து விட்டார்கள். அந்த மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் 72200 72200 என்ற எண்ணுக்கு “மிஸ்டு கால்” கொடுத்து, நேர்மையான, திறமையான, செயல்படும் அரசு அமைக்கும் தி.மு.க.வின் உன்னத முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவே இந்த “மிஸ்டு கால் பிரசாரத்தை” தி.மு.க. தொடங் குகிறது.
தமிழகம் முழுவதுமிருந்து எவ்வித கட்டணமும் இன்றி 72200 72200 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள் ளலாம். நீங்கள் தொடர்பு கொண்டவுடன் மணி ஒலிக்கும். ஒரு முறை ஒலித்தவுடன் தானாகவே இணைப்பைத் துண்டித்துக்கொள்ளும். உடனே கருணாநிதி உங்களை அழைப்பார். அப்போது, மிஸ்டு கால் கொடுத்து தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் கருணாநிதி, “அ.தி.மு.க. அரசை அகற்றும் இந்த சீரிய முயற்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொள்வார். அத்துடன் இந்த “மிஸ்டு கால்” பிரசாரம் நிறைவுக்கு வராது. அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வப் போது உங்களுக்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.
தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கடைசி மாநிலமாக செல்லும் அவலநிலையை அ.தி.மு.க. அரசு தோற்று வித்து விட்டது. தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உரு வாக்கப்பட இந்த “மிஸ்டு கால்” பிரசாரத்தில் கருணாநிதி ஈடுபடுகிறார். தமிழகத்தை மீட்க அனைவரும் இணைவோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .  aanthaireporter.com/

கருத்துகள் இல்லை: