மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடியும் முதல் நாள் கலந்து கொண்டார் . இன்றைய இந்நிகழ்ச்சியில் அமிதாப் ஹேமமாலினி உட்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடனம் ஆடியபோது தீ திடீரென்று பரவியது மள மளவென்று பரவிய தீ மேடை முழுவதையும் எரித்து நாசம் செய்தது. கொழுந்து விட்டெரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். தீ விபத்தை அடுத்து கலைநிகழ்ச்சியை பார்க்க வந்தோர் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக