
உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார். நேட்டோ, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக, ரஷ்யா அனேகமாக ஒவ்வொரு நாளும் புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக, மியுனிக்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் அவர் தெரிவித்தார். ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே வழமையான ஒத்துழைப்பு ஒன்றின் மூலமே, சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். உலக பாதுகாவலன் பதவி மெல்ல மெல்ல ரஷ்யாவை நோக்கி செல்கிறது?
சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடன்படிக்கையை நிலை நிறுத்த, சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் தமது கொள்கையை ரஷ்யா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி கூறியுள்ளார்.
சட்டப்படியான எதிரணிக்குழுக்கள் மீதும், பொதுமக்கள் மீதுமே ரஷ்யா முக்கியமாக குண்டுவீசுவதாக மியூனிக்கில் நடக்கும் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர் பேசினார். சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களை ஓரங்கட்டினாலும் அவர்கள் சரணடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார். மிதவாத கிளர்ச்சிக்காரர்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் அவர்கள் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் பிலிப் ஹமண்டும் எச்சரித்துள்ளார். தாம் பயங்கரவாத குழுக்களையே இலக்குவைப்பதாக ரஷ்யா கூறுகின்றது. bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக