

பாலுமகேந்திரா இனி நம்மோடு இல்லை என்கிற தகவல் வந்து சேர்ந்தது. அந்த விழாவில் கலந்துக்கொள்ளாமல
நல்ல சினிமாவை எடுப்பதைக் காட்டிலும் நல்ல சினிமாவை ரசிக்க பார்வையாளர்களை
பயிற்ருவிப்பது அத்தனை முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் அத்தகைய
பார்வையாளர்களை உருவாக்க பாடுப்பட்டுக் கொண்டிருந்த அத்தனை
அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் பாலுமகேந்திராதான் உறுதுணையாக
இருந்தார். இன்று பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் பாதையில் இருந்து
புதிய பாதை நோக்கி பயணிக்க மிக முக்கிய காரணம் பாலுமகேந்திரா. அவர்
இல்லாமல் போனது தமிழ் ஸ்டுடியோ போன்ற இயக்கங்களுக்கு மாபெரும் இழப்பு. அந்த
இழப்பை யாருமே ஈடுசெய்ய முடியாது. பாலுமகேந்திரா இன்று நம்மோடு இல்லாமல்
போகலாம். ஆனால் அவர் உருவாக்கிவிட்டு சென்ற சினிமா ரசனையே அவரது இருப்பை
உணர்த்திக் கொண்டிருக்கும். அவர் என்றுமே அழியாத கோலம்தான்.
இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள்...
இன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக