புதன், 6 ஜனவரி, 2016

நாஞ்சில் சம்பத் தெரிந்தே உளறினார்....வைகோ வந்துவிடகூடாது என்கின்ற அவசரம்....புகைச்சல் வெளிச்சம்

""பொதுக்குழுவை கோலாகலமாக கொண்டாட லையே... ஏற்கனவே நடந்த எங்க பொதுக்குழுவோடு இதனை ஒப்பிடுகிறபோது ஆயிரத்தில் ஒரு பங்கு ஏற்பாடு பண்ணலியே... ரொம்ப எளிமையால்ல நடத்துனோம்.''""அந்தந்த வீட்டு உரிமை யாளர்களோட அனுமதி பெற்று, அவர்களின் மகிழ்ச்சி யோடுதான் பேனர்கள் வைத்தோம். பேனர் வச்சதால ஆள் போக முடியாம, மூச்சுத்திணறி இறந்துட்டாங்களா?''

""500 பேர் இறந்தது வெள்ளத்தில் அடிச்சிட்டு போனதாலா? வெள்ளத்தை வேடிக்கப்பாக்க போனதாலா? ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். அடுத்த வீட் டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி யிருக்காங்க. ஒப்பாரி கேட்கிறது என்பதற் காக கல்யாணத்தை நிறுத்த முடியாது.''



""யானை நடந்து போகும்போது எறும்புகள் சாகத்தான் செய்யும். பொதுக்குழுங்கிறது கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு திருவிழா. இது ஒரு ஊக்கம். இது ஒரு உற்சாகம். இது ஒரு குற்றால குதூகலம்.''

""அத்திப் பூப்போல ஆடிப் பிறைபோல மக்களை சந்திப்பதற்கு வீதிக்கு எப்போதாவது வருகிற ஒரு முதல்வர் வந்தால் நாங்கள் ஆர்வம் காரணமாக இதை செய்தோம்.''
""நான் கேட்கிறேன். மதுவை குடிக்காம மக்கள் இருக்கப் போகிறார்களாŠ கடையை மூடினா நிறுத்திருவாங்களா?  உத்திரவாதம் இருக்கா? எத்தனை பேர் சாவான் தெரியுமா உங்களுக்கு? அமளிக்காடா ஆகிடும். செயற்கையான மரணங்கள் நாளும் நடக்கும்.''


""தருமபுரியில் மட்டும் இருக்கிற ஒரு கட்சி நாட்டை ஆளப்போகுதுன்னு சொல்றீங்க. திருத்துறைப்பூண்டியை தாண்டாதவங்க இந்த தேசத்தை ஆளப்போறதா சொல்றீங்க. சொந்த தொகுதி சங்கரன்கோவில்ல தரை தாண்ட முடியாதவர்களெல்லாம் இந்த நாட்டி பெரிய கூட்டணி என்று சொல்லிக்கொண்டு தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கணுமா...''""கூட்டணியில் விஜய காந்த்தை ஏற்க மாட்டோம். தி.மு.க.வை ஏற்க மாட்டோம். காங்கிரசை ஏற்க மாட்டோம். என்னைக் கேட்டால் பா.ம.க.வை ஏத்துக்கலாம். காங்கிரசோட எங்களுக்கு தீரா பகை. பா.ஜ.க.வோடு இணக்கமான போக்கு இருக்கிறது. மத்திய அரசுடன் பகைப் போக்கு இல்லை. ''-இவை எல்லாமே "புதிய தலை முறை' மற்றும் "தந்தி' டி.வி. சேனல்களில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் சொன்னவை. பேட்டியைப் பார்த்த பொதுமக்கள் பலரும், அ.தி.மு.கவின் செயல்பாடுகள் பற்றி நாம் என்ன நினைக் கிறோமோ அதை அப்படியே வெளிப்ப டையாக-ஒப்புதல் வாக்குமூலம் போல நாஞ்சில் சம்பத் பேசுகிறாரே என்றே நினைத்தனர். விளைவு? சம்பத்திட மிருந்த கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருக் கிறது.அ.தி.மு.க தரப்பில் கார்டன் ஆட்கள்-மன்னார்குடி வகையறாக்கள் ஆகிய தரப்பிலும், உயரதிகாரிகள் தரப் பிலும் விசாரித்த போது, ""இந்த பேட்டி என்பது ஒரு காரணம்தான். நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்புக்கு இன்னும் பல ரகசிய காரணங்கள் இருக் கின்றன'' என்றவர் கள் அதுபற்றி விரி வாகவே பேசினார் கள், மெல்லிய குரலில். ""நாஞ்சில் சம்பத் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு ஜெ.விடம் 4 முறை கடிதம் கொடுத்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாண்டவனைப் பார்க்கும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. துணைவேந்தரிடம் நான்கைந்து முறை வலியுறுத்தியும் எதுவும் நடக்காததால், கோபம் காட்டியிருக்கிறார் நாஞ்சில். தாண்டவனோ, "மேலிடத்தி லிருந்து எனக்கு எந்த உத்தரவும் வரவில்லை' எனத் தெரிவித்து விட்டார். கோபம் குறையாத நாஞ்சில் சம்பத்துக்கு, சசிகலா தரப்புதான் தனக்குத் தடையாக இருக்கிறது என்ற தகவல் தெரியவர ரொம்பவே நொந்து விட்டார். ம.தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்தவர் நாஞ்சில் சம்பத். பழைய கோபதாபங்களால் தன்னுடைய பேச்சு களில் வைகோவை விமர்சிப்பது அவரது வழக்கம். இந்த நிலையில், தேர்தல் நேர சூழலுக்கேற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்ற ரீதியில் பொதுக்குழுவில் ஜெ. பேசியதும், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளை அ.தி.மு.க பக்கம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படு வதும், அதில் சசிகலா தரப்பு மும்முரமாக இருப்பதும் தெரிய வர, கூடுதல் டென்ஷனாகி விட்டார் நாஞ்சில் சம்பத்.ஐவரணி அமைச்சர்களில் ஒருவரான வைத்திலிங்கத்தை சந்தித்து, "அ.தி.மு.க இப்போது ஜெயலலிதா கண்ட்ரோலில் இல்லை. நல்லாட்சின்னும் நாலாபுறமும் வளர்ச்சின்னும் சொல்றோம். பிறகெதற்கு மக்கள் நலக்கூட்டணியோடு பேசுறீங்க?' எனத் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். வார்த்தைகளுக்கு கடிவாளம் போடாமல் பேசும் சம்பத், தன் பேச்சில் ஜெயலலிதா என்று பெயரைச் சொன்னதைக் கேட்டு அமைச்சர் ஆடிப்போய்விட்டார். "கூட்டணி தொடர்பா இப் போது எந்த முடிவும் எடுக்கப் படலையே?' என்று வைத்தி லிங்கம் சொல்ல, "முடிவுகளை ஜெயலலிதா எங்கே எடுக்கிறார். எல்லாம் உங்க சசிகலாதானே எடுக்கிறாங்க' என வார்த்தை வீச்சுகளைத் தொடர்ந்தார் நாஞ்சில் சம்பத்.இதை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் அமைச்சர் வைத்திலிங்கம். அப்போதே நாஞ்சில் சம்பத்தை நீக்குவதற்கான வலியுறுத்தலை ஜெ.விடம் சசிகலா வைக்க, தேர்தல் நெருங்கும் நிலையில், "கட்சியின் ஸ்டார் பேச்சாளரை இழக்கவேண்டாம். நான் கண்டிச்சி வைக்கிறேன்' என சமாதானப்படுத்தியுள்ளார் ஜெ. இதன்பிறகு, துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பேசிய சசிகலா, "மீடியா விவாதங்களில் பங்கேற்கச் செல்லும் கட்சி நிர்வாகிகள், தலைமையிடம் பர்மிஷன் வாங்கித்தான் செல்லவேண் டும்னு சம்பத்கிட்டே சொல்லுங்க. இது அக்காவோட ஆணை' என்று சொல்ல, இதை நாஞ்சில் சம்பத்திடம் போனில் தெரிவித்திருக்கிறார் தம்பிதுரை.அதற்கு, "தலைமையின் ஆணையா? நீங்க எந்தத் தலைமையை சொல்றீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு ஜெயலலிதாதான் தலைமை. அவங்க சொல்லட்டும்' என்று நாஞ்சில் சம்பத் கோபம் காட்டியுள்ளார். அவரது இந்த பதில், ஒன்றுக்கு இரண்டாக சசிகலாவை எட்ட, பொதுக்குழு கூடுவதற்கு இரண்டு நாள் முன்பாக சம்பத் பற்றிய பஞ்சாயத்து கார்டனில் நடந்துள் ளது. அப்போதும் சம்பத்தை நீக்கும் முடிவுக்கு ஜெ. வரவில்லை. அத்துடன், பொதுக் குழுவில் சசிகலாவுக்கு புதுப் பதவி பற்றிய அறிவிப்பு வெளியிடவும் ஜெ. மறுக்க, “""என் மீது முழு நம்பிக்கை வரும்போது நான் கேட்பதை நீங்க செய்யுங்க'' என்று கோபத்தை வெளிப்படுத் திய சசிகலா, பொதுக்குழுவுக்கும் செல்லவில்லை என்கிறார்கள் கார்டன் தரப்பில்.""சசிகலா இல்லாமல் இளவரசி மட்டும் பொதுக் குழுவுக்கு சென்றால் அது கட்சியிலும் மீடியாக்களிலும் தீனியாகி விடும் என்பதால் கார்டனில் உள்ள இரண்டு முக்கியஸ்தர்களும் இல்லாமல் பொதுக்குழு நடந்ததை கட்சி நிர்வாகிகள் விவரிக்கிறார்கள். பொதுக்குழு முடிந்தபிறகும், நாஞ்சில் சம்பத் பற்றிய பஞ்சாயத்து தொடர்ந்துள்ளது. அதேநேரத்தில், மீடியாக்களிடம் பேசக்கூடாது என தம்பிதுரை சொன்னதை நாம் ஏன் ஏற்கவேண்டும் என நினைத்த நாஞ்சில் சம்பத், தன்னைத் தொடர்பு கொண்ட மீடியாக் களிடம், தலைமையின் அனுமதி யின்றியே ஓ.கே. சொல்லி விட்டார். அதன்பிறகுதான், இரண்டு சேனல்களிலும் சரமாரியான வார்த்தைகளால் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார் சம்பத். உடனே இதனை ஜெ.வின் கவனத்திற்கு கொண்டு சென்ற சசிகலா, "நீங்க கண்டிக்கிறதா சொன்னீங்க. தம்பிதுரை மூலமா உங்க ஆணையை அவர்கிட்டே சொல்லியும், பர்மிஷன் வாங்காம கன்னாபின்னான்னு பேட்டி கொடுத்து, நமக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்காரு' என்று தெரிவிக்க, நாஞ்சில் சம்பத்தின் பேட்டி பற்றி ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் ஜெ. காரணம், முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் மீது எடுத்த அவசர நடவடிக்கையால் ஏற்பட்ட இமேஜ் டேமேஜ் போல ஆகிவிடக்கூடாது என்ற அனுபவப் பாடம்தான்.ஒரு சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பான நிலையில், இன்னொரு சேனலில் ப்ரமோ காட்சிகள் ஓடியிருக்கின்றன. அவற்றின் டேப்புகளைப் பெற்ற உளவுத்துறையின் புது ஐ.ஜி சத்தியமூர்த்தி அது பற்றிய ரிப் போர்ட்டையும் கொடுத்திருக் கிறார். பொதுக்குழு ஆடம்பரம் பற்றிய மக்களின் அதிருப்தி மனநிலையை மேலும் கிளறிவிடும் அளவிலான பதில்கள், தி.மு.கவை மட்டுமின்றி மற்ற கட்சிகளையும் -குறிப்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை சகட்டு மேனிக்கு விமர்சிப்பது, புகழ்வதாக நினைத்து கட்சித் தலைமை மீது பொதுமக்கள் வெறுப்பு கொள்ளும் வகையிலான கருத்துகளை வெளிப் படுத்துவது என நாஞ்சில் சம்பத்தின் பேட்டி, முற்றிலும் அ.தி.மு.க.வின் இமேஜை காலி செய்வது போல அமைந்ததை அறிந்த ஜெ., அதனையடுத்துதான், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியைப் பறித்து அறிவிப்பு வெளியிட்டார்'' என்கிறது அதிகாரிகள் வட்டாரம்.அ.தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகளிடம் பேசியபோது, ""தேர்தல் களத்தை தனித்தே சந்திக்கலாம் என்ற நிலைமை இப்போது இல்லை. ஆட்சி மீதான அதிருப்திகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. பெயர் தெரியாத இயக்கமெல்லாம் அம்மா பேனரைத் துணிச்சலாக கிழிக்க ஆரம்பித்துவிட்டன. இது எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடக்கூடாது. குறிப்பாக தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தால் அதன் வாக்கு வங்கி பலமாகவே இருக்கும். ஆட்சிக்கு எதிரான வாக்குகளும் அந்த அணிக்கு சென்றுவிடும். அப்படியொரு நிலை வந்தால் பா.ஜ.க கூட்டணியோ,  த.மா.கா., ம.ம.க. போன்ற கட்சிகளுடனான கூட்டணியோ மட்டும் போதாது. அ.தி.மு.க அணியின் பலம் அதிகரிக்க வேண்டுமென்றால் மேலும் சில கட்சிகள் வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள வைகோவுக்கு தி.மு.க எதிர்ப்புதான் பிரதானம். விடுதலை சிறுத்தைகளும் தி.மு.க.வுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் இருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எங்களுக்கு சாதகமான கட்சிதான். சி.பி.எம்.தான் கூட்டணி உறவு பற்றி யோசிக்கக்கூடிய கட்சியாக இருக்கும். அவர்களுக்கும் நியாயத்தை எடுத்துச்சொல்லி கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்படும். இல்லையென்றால் பா.ஜ.க., த.மா.கா., ம.தி.மு.க. என்ற அளவிலாவது ஒரு கூட் டணியை உருவாக்கலாம். எந்த வாய்ப்பையும் இழக்கத் தயாராக இல்லை. இதெல்லாம் புரியாமல் உளறிக்கொட்டி பதவியை இழந்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்'' என்கிறார் கள் விரிவாக.""பதவிதான் பறிபோனது, கட்சியிலிருந்து நீக்கவில்லை. பதவியுடன் கிடைத்த இனோவா காரும் பறிபோகவில்லை என்ற நிம்மதியுடன் கட்சித் தலைமையின் கருணைப் பார்வையை எதிர்நோக்கியிருக்கும் நாஞ்சில் சம்பத்தின் அடுத்த கட்ட முடிவு சில நாட்களில் தெரியும்'' என்கிறார்கள் அவரது தரப்பில்.
 nakheeran,in -இரா.இளையசெல்வன்

கருத்துகள் இல்லை: