வெள்ளி, 8 ஜனவரி, 2016

விசர் டிவியின் விபச்சாரமா கள்ளகடத்தலா? மொள்ளைமாரியா முடிச்சவிக்கியா?


விஜய் டி.வி யிலிருந்து ஒருவர் நேற்று (06-01-2016) போன் பண்ணி, உங்க நம்பர் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்குனேன். நீயா – நானா வில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்களேன்’ என்றார்.
‘எனக்கு அப்படி யாரையும் தெரியாது’ என்றேன்.
இன்றும் கொஞ்சம் நேரத்திற்கு முன் அவரே ..
‘காலையில இருந்து உங்க நம்பருக்கு முயற்சி செய்கிறேன்.. கிடைக்கல. நாளைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய விவாத்துல கலந்துக்க முடியுமா? ஆதரவா, எதிரா எந்தத் தலைப்பில் வேணுனாலும் பேசுங்க’ என்றார்.
‘சிறப்பு விருந்தினராகவா?’ என்றேன்
‘இல்லை. ஒரு டீம் ல ஒக்கத்து பேச..’ என்றார்.
‘வாய்ப்பில்ல.. சிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ என்றேன்.
‘அப்போ நான் கேட்டுட்டு சொல்றேன்..’ என்றார்.
நீயா நானா குழுவினரோடு எனக்கு இது இரண்டாவது அனுபவம்.
விட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..?’ ன்னு கேட்பார்கள் போலும்.

நீயா – நானாவில் இதுவரை என்னைக் கூப்பிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.
இனிமேல் அவுங்க எப்பவுமே என்னைக் கூப்பிடாமல் இருக்கப் போவதற்கு இப்ப நான் எழுதியிருக்கிற இந்தப் பதிவு ஒன்றே காரணமாக இருக்கும். இருக்கணும். மதிமாறன்,wordpress.com

கருத்துகள் இல்லை: